கொரோனா இரண்டாம் அலையின்போது மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்றும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் ‘ஆக்சிஜன் பற்றாக்குறை மரணம் என குறிப்பிடவில்லை’ என்றும் உ..பி. அரசு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 16-ம் தேதி உத்தரப் பிரதேச சட்டமன்ற குழுவில் iதனிஅ அந்த அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் இறந்த 22,915 நோயாளிகளில் எவருக்கும் ‘ஆக்சிஜன் பற்றக்குறையால் மரணம்’ என்று இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவில்லை என்றும் உ.பி அரசு கூறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றக் கூட்டதில் கேள்வி நேரத்தின் போது, “மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அமைச்சர்கள் பலர் கடிதம் எழுதினார்கள். இது தவிர எம்.பி.க்களும் இதுபோன்ற புகார்களை கூறியிருந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் இந்த மரணங்கள் குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளதா? கங்கையில் இறந்த உடல்கள் மிதந்ததையும் மக்கள் அவதிப்பட்டதையும் அரசு பார்க்கவில்லையா?” என்று காங்கிரஸ் உறுப்பினர் தீபக் சிங்கு கேள்வி எழுப்பினார்.
படிக்க :
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
அதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் இறந்தால் மருத்துவர்கள் இறப்புச் சான்றிதழ் வழங்குவார்கள். மாநிலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கிய 22,915 இறப்புச் சான்றிதழ்களில் எதிலும் ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம்’ என குறிப்பிடவில்லை என்று கூறினார்.
தொற்றுநோயின்போது பல இறப்புகள் நீண்டகால சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களால் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், பற்றாக்குறை ஏற்பட்டபோது மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை அரசாங்கம் ஏற்பாடு செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.
உ.பி.-ன் ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்தும் பல்வேறு விவரங்கள் செய்தி ஊடகங்களில் வெளிவந்தன. அதில், த வயர் செய்தி ஊடகம் வெளியிட்ட 233 இறப்புகளின் விவரங்களுடன் தொகுக்கப்பட்ட ஒரு பட்டியலில், “மருத்துவமனை அதிகாரிகள் ஆக்சிஜன் பற்றாகுறை காரணங்களை உறுதிசெய்துள்ளனர். மேலும், 70 இறப்புகள் ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்று நோயாளிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சில மருத்துவமனைகள் “ஆக்சிஜன் அவுட் ஆஃப் ஸ்டாக்” பலகைகளை மருத்துவமனைக்கு வெளியில் வைத்தன. மேலும், லக்னோவில் பல  மருத்துவமனைகள் நோயாளிகளை ஆக்சிஜன் பற்றாக்குறையால் வேறு இடத்திற்குச் செல்லச் சொன்னதாக கொரோனா இரண்டாம் அலையின்போது பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை குறித்து புகாரளிப்பவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவினார், அவர்களை சமூக விரோதிகள் என்றும் அழைத்தார்.
அதனால் உத்தரப்பிரதேசத்தில் நிலைமை குழப்பமானதாக மாறியது. தனி நபர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதைத் தடைச்செய்த அரசாங்க உத்தரவால் ஆக்சிஜன் தேவைப்படும் மக்கள் அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை. மோசமான நிலையில் இருந்த தங்கள் குடும்பத்தினருக்காக ஆக்சிஜனை நிரப்பியதற்காக பலர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று யோகி அரசின் அடக்குமுறைகளாலும், மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன. தற்போது இறப்பு சான்றிதழில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்கள். இதேபோன்று கடந்த 2021 ஜூலை மாதம் கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று ஒன்றிய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் கூறினார்.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலர் மரணமடைந்தது பற்றியும், உ.பி.யின் இடுகாடுகள் நாள் முழுவதும் ஓயாமல் எரிந்துக் கொண்டிருந்தது பற்றியும் இந்த நாடே அறியும். ஆனால் மரணம் ஏதும் இல்லை என்று புழுகி வருவதன் மூலம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது யோகி அரசு.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க