புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்

தனது இந்துராஷ்டிரக் கனவுக்காக முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன

புல்லிபாய் என்ற வலைத்தள செயலியின் மூலமாக முசுலீம் சமூகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள பெண்களையும் இணையத்தில் ஏலம் விட்டுள்ளனர் சங்க பரிவாரக் கும்பல்கள்.
கடந்த ஆண்டு ஏற்கெனவே சுல்லி கேர்ள்ஸ் என்ற பெயரில் இதே போன்ற செயலியை உருவாக்கி முசுலீம் சமூகப் பெண்களை இழிவுபடுத்தினர். அதனைத் தொடர்ந்து அதன் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், மற்றொரு பெயரில் அதே வகையிலான செயல்பாட்டைத் துவங்கியிருக்கிறது சங்கி கும்பல்.
கடந்த ஆண்டே இவ்விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட போது, எவ்வித கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் உத்தரப் பிரதேச போலீசு இழுத்தடித்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது. இந்த ஆண்டில் புல்லி பாய் என்ற இந்த செயலி குறித்த புகார், பாஜக ஆளாத மகாராஷ்டிர மாநிலப் போலீசில் பதிவு செய்யப்பட்டதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, இச்செயலியை உருவாக்கிய நபர்கள் மற்றும் பகிர்ந்த நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்லிபாய் செயலியில் 16 வயது சிறுமி முதல் சங்க பரிவாரத்துக்கு எதிராகப் பேசிவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 67 வயதான சமூகச் செயற்பாட்டாளர் வரை அனைத்து முசுலீம் பெண்களையும் ஆபாசமாகச் சித்தரித்து அவர்களை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். – பாஜக -வின் இந்துராஷ்டிரக் கனவை சாதிப்பதற்கான முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன, என்பதை விரிவாகப் பேசுகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்திமுருகன்.

அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க