புல்லி பாய் செயலி குறித்து புகார் அளித்த பெண்களுக்கு மிரட்டல் :
முசுலீம் பெண்களை பொதுவெளியில் ஏலம்விடும் வகையில் உருவாக்கப்பட்ட புல்லி பாய் செயலியின் மூலம் முசுலீம் வெறுப்பு அரசியலை நடைமுறைப்படுத்திவரும் சங்கபரிவாரக் கிரிமினல் கும்பலுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மும்பை போலீசு அந்தக் கிரிமினல் கும்பலின் கூட்டாளிகளைக் கைது செய்து வருகிறது. இந்நிலையில், புகார் அளித்த பெண்களுக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் அழைத்தவன், தங்களுக்கு எதிராக அளித்ததையும் தங்களது பெயரையும் அம்பலப்படுத்தியதையும் குறிப்பிட்டு மிரட்டியுள்ளான். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் எவ்வாறு சங்க பரிவாரக் கிரிமினல் கும்பலுக்கு கிடைத்தது என்ற வகையிலும் போலீசு விசாரித்து வருகிறது.
படிக்க :
♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
♦ நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
புல்லி பாய் செயலி தொடர்பாக இதுவரை நீரஜ் பிஸ்னோய் என்பவனையும் உத்தரகாண்ட்டை சேர்ந்த ஸ்வேதா சிங், மாயங்க் ராவல், பெங்களூருவைச் சேர்ந்த விஷால் குமார் ஜா ஆகியோரைக் கைது செய்திருக்கிறது மும்பை போலீசு.
கடந்த ஆண்டே அம்பலமான சுல்லி டீல்ஸ் செயலி குறித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவாகவே இந்த ஆண்டு புல்லி பாய் செயலி உருவாக்கப்பட்டு முசுலீம் பெண்களை தவறாக சித்தரிப்பது தொடர்கிறது.
செய்தி ஆதாரம் : த வயர்
***
டெக் ஃபாக், புல்லி பாய் செயலிகள் – எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம் :
டிட்டர்ஸ் கில்ட் எனப்படும் இந்திய பத்திரிகை ஆசிரியர் கூட்டமைப்பு புல்லி பாய் செயலி மூலமும், டெக் ஃபாக் செயலி மூலமும் பெண் பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இந்திய பத்திரிகை ஆசிரியர் கூட்டமைப்பு வெலியிட்டுள்ள தனது அறிக்கையில், ”ஆளும் கட்சியையும் நடப்பு அரசாங்கத்தையும் விமர்சித்த பெண் பத்திரிகையாளர்களை ‘அமைதிப்படுத்தும்’ நோக்கோடு இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இது சட்டத்தை மீறியும், ஜனநாயக விழுமியங்களை நொறுக்கியும் நடத்தப்பட்டுள்ளது.
கிட் ஹப் தள செயலிகள் இரண்டின் மூலம் முசுலீம் பெண்களை இணையத்தில் ஏலம் விட்ட சம்பவத்திலும் அரசாங்கத்தையும் ஆளும் கட்சியையும் விமர்சித்த பெண் பத்திரிகையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் இந்தக் கைதையும்ன் தாண்டி இத்தகைய செயலிகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும்.
படிக்க :
‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வது, துன்புறுத்துவது தொடர்பான விவகாரத்தில் சமீபத்தில் தி வயர் இணையதளம் விசாரணையின் மூலம் அம்பலப்படுத்தப்படுத்தியிருக்கிறது. அதில், டெக் ஃபாக் எனும் செயலி மூலம் பயன்படுத்தப்படாத வாட்சப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இணையதளத்தில் பத்திரிகையாளர்களுக்கு விசமத்தனமான குறுஞ்செய்திகளை அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.
பத்திரிகையாளர்களை அவர்களது கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி பணிக்குச் செல்வதை தடுத்து அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவது தான் இத்தகைய விசமத்தனமான, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறுஞ்செய்திகளை அனுப்புவதன் நோக்கம், அறிகைகளின் படி, பல பெண் பத்திரிகையாளர்கள் ஆயிரக்கணக்கான ஆபாச டிவீட்டுகளுக்கு இலக்காக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.
டெக்ஃபாக் செயலியில் ஆளும்கட்சியின் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், உய்ச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, இதனை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.
செய்தி ஆதாரம் : த வயர்

 கர்ணன்