ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் இந்த ஆண்டில் மிகப் பெரும் நட்டத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்கள். உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள்களில் சுமார் 50%-க்கும் மேற்பட்டவை விற்பனையாகாமல் தேங்கியிருக்கின்றன.
இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி என்றாலே ஜம்மு – காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் நம் நினைவிற்கு வரும். இரண்டு மாநிலங்களும் தான் இந்தியாவின் தேவைக்கும் ஏற்றுமதிக்குமான ஆப்பிள் உற்பத்தியை மேற்கொள்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 70% மக்களின் வாழ்வாதாரம், ஆப்பிள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்துடன் நேரடியாவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஆப்பிள் உற்பத்தி ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது.
படிக்க :
♦ காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை
♦ காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !
இந்த ஆண்டு உற்பத்தியான ஆப்பிள்கள் எதுவும் விற்பனையாகாமல் குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளிலும், சிறுவியாபாரிகளின் கிடங்குகளிலும் தேங்கிக் கிடக்கின்றன. இதற்கு முக்கியக் காரணமாக ஈரானில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஆப்கான் வழியாக குஜராத் எல்லை, வாகா எல்லை ஆகியவற்றின் மூலம் இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுவதே காரணம் என்று ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் ஒரு ஆப்பிள் பெட்டி ரூ.1000 என்ற விலையில் விற்பனையானது இந்த ஆண்டில் ரூ.600- 700 என்ற விலையில் தான் விற்பனையாகும் நிலையில் இருக்கிறது என்று கூறுகின்றனர் வியாபாரிகள்.
ஈரானில் இருந்து சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாமல் கடத்தி வரப்படும் ஆப்பிள்களால் ஜம்மு காஷ்மீரில் உற்பத்தியாகும் ஆப்பிள்கள் தேக்கமடைகின்றன. இதனால், சிறு வியாபாரிகளின் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 1.5 கோடி ஆப்பிள் பெட்டிகள் தேங்கிக் கிடப்பதாகவும், குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகளில் 1.5 கோடி ஆப்பிள் பெட்டிகள் தேங்கியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் ஆப்பிள் உற்பத்தியாளர்கள். இதனால் காஷ்மீரின் பொருளாதாரமே தேக்கமடையும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர், காஷ்மீரிகள்.
கடந்த 2019-,ம் ஆண்டு காஷ்மீரில் பிரிவு 370-ஐ ரத்து செய்த பிறகு தொடர்து காஷ்மீர் மீது இராணுவரீதியான தாக்குதல்களையும், அரசியல்ரீதியான தாக்குதல்களையும் தொடுத்துவந்த மோடி அரசு தற்போது பொருளாதார ரீதியாகவும் இத்தகையதொரு தாக்குதலைத் தொகுத்துள்ளது.
ஈரானில் இருந்து டன் கணக்கில் இறக்குமதியாகும் ஆப்பிள்கள் ஒன்றிய அரசின் கண்ணில் படாமல் மாயமாக மறைந்து உள்ளே வர வாய்ப்பு இல்லை என்பது தெளிவு. ஈரானில் இருந்து வரும் ஆப்பிள்களை தடுத்து நிறுத்தியோ, அல்லது அதிகமான வரி விதித்தோ காஷ்மீர் மக்களை காப்பாற்றியிருக்க வேண்டிய அரசு, ஆப்பிள் இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்ளும் பெரும் கார்ப்பரேட்டுகளின் நலன் கருதியும், காஷ்மீரிகளை பழிவாங்கும் நோக்குடனும் இதனைக் கண்டும் காணாமல் விட்டுள்ளது மோடி அரசு.
படிக்க :
♦ அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !
♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !
காஷ்மீர் ஆப்பிள் வியாபாரிகள், தற்போதைய விலைவீழ்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நட்டத்தையும் தாண்டி, தற்போது விற்பனையாகாத ஆப்பிள்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பதற்கும் மேலதிக தொகை செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதே போன்றுதான் கடந்த ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில், குளிர்பதன கிடங்குகள் மற்றும் ஆப்பிள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருக்கும் அதானியின் அதானி அக்ரி ஃப்ரெஷ் நிறுவனம் கடந்த ஆண்டு அடிமாட்டு விலைக்கு ஆப்பிள் விற்பனை விலையைக் குறைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.
குளிர்பதன கிடங்குகளை தன்னகத்தே கொண்டிருக்கும் அதானி குழுமம், ஆப்பிளை குறைவான விலைக்கு வாங்கி பதுக்கி அதனை கிராக்கி இருக்கும் சமயத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. அரசு தரப்பில் விவசாயிகளின் விளைபொருளை சேமிக்க குளிர்பதனக் கிடங்கு ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதன் காரணமாகவே அதானியின் கொள்ளை இலாபத்திற்கு விவசாயிகள் பலியாக்கப்பட்டனர்.
அதே போலவே தற்போது ஈரானில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை கண்டும் காணாமல் விடுவதன் மூலம், காஷ்மீர் விவசாயிகளும் வியாபாரிகளும் பாசிச மோடி அரசால் பழிவாங்கப்படுகின்றனர்.
கர்ணன்
செய்தி ஆதாரம் : த வயர்
குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோருவதற்கு இதுவே காரணம்.
முன்பு வரை, பிரீமியம் தர ஆப்பிள்கள் மண்டியில் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்கப்பட்டது , . தற்போது 30 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பிரீமியம் தர ஆப்பிள்கள் என்று அதானி அக்ரி ஃப்ரெஷ் வாங்குவது (சுப்ரீம்.பிரிமியம் அது,மேன் மக்களுக்கானது.அவர்கள் ருசித்து சாப்பிடுவதை நாம் டிவியில் வேடிக்கை மட்டும் பார்க்கலாம் ) மொத்த உற்பத்தியில் 20% மட்டும்தான்.
மற்றவை எல்லாம் குப்பை விலைக்குதான்.அது அதிகப்பட்சம் கிலோ ரூ 9.50.ஜாம்,பழக்கூழ்க்கானது இது.
ஆனால்,டீசல் மற்றும் பூச்சிக்கொல்லிகள்/ உரங்களின் விலை மட்டுமல்ல, பேக்கேஜிங் விலையும் கூட கடந்த ஆண்டை விட 30 சதவீதம் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.விவசாயிகளை, அதானிக்கு அடிப்பணியவைக்க அரசே அனுமதிக்கும் தந்திரம்தான் கள்ள மார்க்கெட்.
மோடி கும்பல் விவசாயத்தில் இடைத்தரகர்களை ஒழிக்கும் லட்சணம் இதுதான்.
ஒப்பீட்டளவில் ஓரளவு வசதியாக வாழ்ந்தவர்கள் ஆப்பிள் விவசாயிகள்.இந்தியாவை மொத்தமாக பசு மாநிலங்களாக்கி(cow belt) மூத்திரம் குடிக்க வைப்பதுதான் சங்கிகளின் ராமராஜ்ஜியம்.