காஷ்மீரின் சிறப்புரிமையை உறுதி செய்யும் அரசியல்சாசன சட்டத்தின் பிரிவு 370 -ஐ இரத்து செய்து, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரவிட்டது மத்திய மோடி அரசு. அதனைத் தொடர்ந்து காஷ்மீரின் கட்சித் தலைவர்களை தடுப்புக்காவலில் அடைத்து, காஷ்மீர் முழுவதும் ஊரடங்குச் சட்டம் போட்டு, காஷ்மீர் மக்களை கடந்த ஓராண்டாகவே திறந்தவெளி சிறைக் கைதிகளாக வைத்திருக்கிறது மோடி அரசு.

ஆகஸ்டு 6, 2019 முதல் முள்வேலிக்குள் முடக்கப்பட்ட காஷ்மீர்.

காஷ்மீர் முழுவதும் மக்களின் வீரமிகு எழுச்சிப் போராட்டங்கள் நடந்த போதும் அனைத்தும் இராணுவத்தால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டன. ஊடகங்கள் முடக்கம், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், இணையச் சேவை முடக்கம், மக்கள் வாழ்வாதார முடக்கம் என தொடரந்து எண்ணற்ற துன்பங்களை அம்மக்களுக்கு இழைத்து வந்துள்ளது மோடி அரசு.

4 மாத கொரோனா ஊரடங்கிற்கே நாம் வாழ்வாதாரம் இழந்து வீதியில் நிற்கும் நிலையில், கடந்த ஓராண்டில் காஷ்மீர் மக்களின் வாழ்நிலை எவ்வளவு மோசமாகியிருக்கும். அதை பதிவு செய்திருக்கிறது அல்-ஜசீராவின் இந்த புகைப்படக் கட்டுரை !

***

காஷ்மீரின் போக்குவரத்து அலுவலகத்தின் முன்பாக, பேருந்து பயணச் சீட்டுக்காக காத்திருக்கும் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள். காஷ்மீரின் முழு ஊரடங்கைத் தொடர்ந்து இவர்கள் இமாலயப் பகுதியில் இருந்து, தொலைதூரத்தில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் கிராமங்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று ஈத் பண்டிகைக்கான தொழுகை முடித்தபின், ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபடும் காஷ்மீரிகள். இந்நிகழ்வில் “சுதந்திரம் வேண்டும்” மற்றும் “இந்தியாவே திரும்பிப் போ!” என போராட்டக்காரர்கள் முழங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.

படிக்க:
தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!
பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் இந்தியப் படைகளின் தாக்குதல் தொடர்கதையாகிப் போனது. இந்நிலையில் மருத்துவமனைகள் போலிசின் தீவிர கண்காணிப்புக்குள்ளான சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு ஆளாகி, அருகாமையில் உள்ள ஒரு விட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நபர்.

கடந்த ஆகஸ்ட் 16, 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டத்தின் போது, தனது கைகளில் “சுதந்திரம் வேண்டும்”, “சட்டப்பிரிவு 370 -ஐ அமல்படுத்து” என்ற முழக்கத்தை மெகந்தி மூலம் எழுதி காண்பிக்கும் காட்சி.

ஸ்ரீநகரில், இந்தியப் படையினரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சிதறி ஓடும் காஷ்மீரிகள். நாள் – செப்டம்பர் 6, 2019

இந்திய தேசியவாதிகளால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொது முடக்கம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு மொத்த காஷ்மீரும் சிறைவைக்கப்பட்டது. அதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள்.

கடந்த அக்டோபர் 11, 2019 அன்று ஸ்ரீ நகரில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த போராட்டத்தில், மொத்த காஷ்மீரின் துயரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் முள்வேலிக் கம்பிகளை முகத்தில் சுற்றி போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்.

கடந்த அக்டோபரில் ஒவ்வொரு அங்குலமும் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழலில் ஒரு சிறுமி சைக்கிளில் செல்லும் காட்சி.

ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு மையத்தில் அவரவர் தொலைபேசிகளில் உள்ள இணைய வசதியைப் பயன்படுத்தும் காட்சி. கடந்த மார்ச் 4, 2020-ல் தான் பல மாதங்களுக்குப் பிறகு இணைய சேவைகள் காஷ்மீரில் அனுமதிக்கப்பட்டதன. அதிலும் தற்போது வரை 4-ஜி சேவைகள் முடக்கப்பட்ட நிலையே தொடர்கிறது.


தமிழாக்கம்: அன்பு
நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க