அரியலூர் கிறித்துவ பள்ளியில் படித்த மாணவியின் தற்கொலை விவகாரத்தை மதமாற்ற விவகாரமாக சித்தரித்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த விவகாரத்தில் பொய்களைப் பரப்பி, எடிட் செய்யப்பட்ட வாக்குமூலக் காணொலி மூலம் ஒரு மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்திருக்கிறது பாஜக.
அந்த மாணவி பேசிய முழுக் காணொலியும் வெளியான பின்னர்தான் மதமாற்றம் என்னும் பெயரில் கலவரம் செய்ய பாஜக செய்த முயற்சிகள் அம்பலமாகின. ஆனால் அதற்கு முன்னரே இது பற்றிய பொய்யான செய்தியை இந்திய அளவில் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி ஒரு கருத்துருவாக்கத்தை செய்திருக்கிறது பாஜக கும்பல்.
தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக சங்க பரிவாரக் கும்பலின் திட்டத்தை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் துணைவேந்தன். பாருங்கள் ! பகிருங்கள் !