மத சுதந்திரம் உள்ளிட்ட அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி 7 அன்று முஸ்லீம் பெண்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் பெங்களூரு, மைசூர், ஹாசன், கோலார், ஷஹாப்பூர், ஷிவமொக்கா மற்றும் உடுப்பி உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டன.
உடுப்பியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஹிஜாப் அணிந்த பெண்கள் தங்களது அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரினர்.
படிக்க :
♦ ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
♦ கும்பல் மனோபாவமே சங்கிகளின் பலம் || சம்சுதீன் ஹீரா
முஸ்லீம் பெண் மாணவர்கள் வழக்கமாக அணியும் ஹிஜாப்-ஐ எதிர்ப்பதற்காக பல கல்லூரிகளில் இந்துதுவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்புகளுக்கு வந்தனர். சில கல்லூரிகளில் இந்துத்துவ மாணவர்கள் வரவில்லை என்றாலும் நிர்வாகமே முஸ்லீம் மாணவர்களை வகுப்புகளுக்குள் அனுமதிக்காமல் தனி அறையில் உட்கார வைத்து பிரிவினையை ஏற்படுத்தியது. உடுப்பியில் பஸ்ரூரில் உள்ள ஸ்ரீ சாரதா கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்திராவதி ஷெட்டி முஸ்லீம் மாணவர்களை தனி அறையில் உட்கார வைத்துள்ளார். அது குறித்து ஊடகங்களின் கேள்விக்கு கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டார்.
உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள டாக்டர் பி.பி. ஹெக்டே முதல் தரக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் கே.உமேஷ் ஷெட்டி “எந்த மாணவரும் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வரவில்லை” என்றார். மேலும், “மாநில அரசு மற்றும் நிர்வாகத்தின் உத்தரவின்படி நாங்கள் செயல்படுகிறோம். அவர்கள் (பெண் மாணவர்கள்) வகுப்பிற்குள் ஹிஜாப் அணியக் கூடாது” என்றார்.
இதற்கிடையில் பிப்ரவரி 8 அன்று இந்துத்துவ மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், முஸ்லீம் பெண் மாணவர்களை கேலி செய்தல், கல்லூரியில் கல் வீசுதல் மற்றும் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவி கொடியை ஏற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
#Hassan: visuals coming from Hassan where Muslim women's occupied the streets. #HijabisOurRight
6/n pic.twitter.com/PdiIrP6jjo
— Syed Mueen (@Mueen_magadi) February 7, 2022