உக்ரைன் போர்: உக்ரைன், கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படையே, வெளியேறு!

கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கருங்கடல் பிராந்தியத்திலிருந்தும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளே, வெளியேறு!

• அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளின் உலக மேலாதிக்கப் போட்டாபோட்டிக்கான உக்ரைன் மீதான போரை எதிர்த்துப் போராடுவோம் !

• உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!

• ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போட்டாபோட்டியை உலகப் போராகத் தீவிரப்படுத்த குவாட் (QUAD), ஆக்கஸ் (AUKUS) போர்க் கூட்டணிகளைக் கட்டியமைத்துள்ள அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியைத் தகர்த்தெறிவோம்!

படிக்க :

உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!

உக்ரைன்: அமெரிக்க பேராசையில் விழுந்த மண் !

• ஈராக், ஆப்கானிஸ்தான், யூகோஸ்லாவியா, லிபியா மீது ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியும், ரஷ்யா, ஈரான், வெனிசூலா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தும், இதர நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் பதிலிப் போர்களையும் அரங்கேற்றியுமுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கு, ரஷ்யா மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த நியாயமும் அருகதையும் கிடையாது!

• ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போரை, ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மேலாதிக்கத்துக்கு எதிரான நீதியான புரட்சிகர உள்நாட்டுப் போராக வளர்த்தெடுத்து, உழைக்கும் மக்களின் விடுதலைச் சாதிக்கப் போராடுவோம்!

• போரைத் தூண்டிய முதல் குற்றவாளி அமெரிக்க மேலாதிக்க வல்லரசையும், ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போட்டாபோட்டியையும் ஆக்கிரமிப்புப் போர்வெறியையும் எதிர்க்காமல், அமைதி – சமாதானம் பேசி மழுப்பும் சமரசவாதிகளைத் திரைகிழிப்போம்!

• ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்குமான போரில் பாட்டாளி வர்க்கம் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது! ரஷ்யாவின் போர்த்தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடன் அணிவகுத்து நிற்கவும் கூடாது!

• நியாயமான தேசிய இன சுய-நிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கும் ஏகாதிபத்திய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிவோம்!
ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நின்று தேசிய இன விடுதலையைச் சாதிக்கத் துடிக்கும் துரோகத்தனத்தை முறியடிப்போம்!

• உலக நாடுகளின் சுதந்திரத்தையும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் நிலைநாட்டப் போராடுவோம்!

• உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கருங்கடல் பிராந்தியத்திலிருந்தும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளே, வெளியேறு!

• உலகப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க