ந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி 27 சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் 1-ம் தேதி 21 சுங்கச்சாவடிகளுக்கும் என இரண்டு கட்டங்களாக சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பரனூர், பட்டறை பெரும்புதுர், தூத்துக்குடி வாகைக்குளம், நெல்லை நாங்குனேரி உள்பட 24 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிமுதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஒருமுறை செல்வதற்கு குறைந்த கட்டணம் ரூ.50 அதிகபட்ச கட்டணமாக ரூ.350 வரை உயர்ந்துள்ளது.

படிக்க :

சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !

சுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் ?

சென்னையில் உள்ள பரனூர், சூரப்பட்டு மற்றும் வானகரம் ஆகிய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. மேலும் தமிழக எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும் பேசினர். ஆனால் இந்த கோரிக்கையை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு தற்போது கட்டண உயர்வை அறிவித்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களை வாழவிடாத நிலைக்கு தள்ளியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதிகட்காரி அடுத்த 3 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்கசாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார். அதன்படி தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் இதுவரை அகற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த சுங்கச்சாவடிகளுக்கும் சேர்த்து கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது ஒன்றிய அரசு.

toll gate medavakkam sholinganallur2நாடாளுமன்றத்திலும், ஊடகப் பேட்டிகளிலும் யோக்கிய சிகாமணிபோல் அளந்து விடும் இந்த பாசிச அரசு, தான் பேசியதை கூட சிந்திக்க மறுக்கின்றது. அது சரி…! அண்ட புளுகளை மட்டுமே பேசுவது என தனது அன்றாட வாழ்க்கையாக வாழும் மோடியின்கீழ் செயல்படுபவர்கள் அவரை போலத்தானே செயல்படுவார்கள். அவர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது சுங்க கட்டணம் உயர்ந்துள்ளதால் அது மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்தி மேலும் சுரண்ட தொடங்கியுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால், அரிசி, அத்தியாவசிய மருந்து பொருட்கள் விலை உயர்வுடன் தற்போது சுங்க கட்டணமும் சேர்ந்துள்ளது. தனது நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத இந்த பாசிஸ்டுகள்தான் பக்கத்து நாடான இலங்கையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; அந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள். உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டுவதுதான் இந்த ஒன்றிய அரசின் நோக்கம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.


வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க