வம்பர் 5 முதல் 137 நாட்கள் வரை பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 விலையில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு ஒன்றிய அரசானது பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மார்ச் 29, 2022 நிலவரப்படி, பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00-க்கு விற்கப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் 7 முறை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.20 வரை அதிகரிக்கக் கூடும் என எண்ணெய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவானது தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியை தான் சார்ந்து உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் விலை 70 – 80 டாலருக்கு இடையில் இருந்தது. தற்போது 139 டாலரை தொட்டுள்ளது. 150 டாலரை தாண்டும் என எண்ணெய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படிப்ப :
ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
இவ்விலைவுயர்க்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை காரணம் காட்டுகிறது ஒன்றிய அரசு. போரினால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு பேரல் விலை ஏறுகிறது. அதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுவதாக கூறுகிறது.
மார்ச் 30 இந்து நாளிதழ், “கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.29.02 அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.27.58 அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் நடந்துக்கொண்டா இருந்தது? அதுமட்டுமில்லாமல் போரினால் அமெரிக்காவானது ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தபோதும் ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெயை வர்த்தகம் செய்துக்கொள்ள அமெரிக்கா அனுமதித்தது. ரஷ்யாவும் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை தருவதாக கூறியது. எனவே பெட்ரோல், டீசல் விலை பகுப்பாய்வு செய்து பார்ப்பதன் மூலம் தான் உண்மையான காரணத்தை புரிந்துக்கொள்ள முடியும்.
000
இந்தியாவானது தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petrolieum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிக் கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்தும் பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது.
நவம்பர் 4, 2021 நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை (சென்னையில்) ரூ.101.40; மத்திய அரசு நிர்ணயிக்கும் 1 லிட்டர் கச்சா எண்ணெய் அடிப்படை விலை ரூ.39.40; போக்குவரத்து மற்றும் சுத்திகரிப்பு செலவு ரூ.8.88; பெட்ரோல் டீலர் கமிஷன் ரூ.4.52; மத்திய மற்றும் மாநில அரசு வரி ரூ.48.60; ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 81.05 டாலர், இந்திய ரூபாயில் 6159.8. ஒரு பேரல் என்பது 159 லிட்டர். மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் அடிப்படை விலை ரூ.39 – 40.
மத்திய அரசானது 2019 – 2020 நிதியாண்டில் பெட்ரொல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பின் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் 2 லட்சத்து 13 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தின் மூலம் 26 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
மோடி அரசு சொல்வதைப்போல, உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் கச்சா எண்ணெய் விலை ஏறினால் அரசானது தன்னுடைய வரியை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே? ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் வரி விதிப்பை குறைத்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை திறந்துவிட்டு, உழைக்கும் மக்களின்மீது வரிக்கு மேல் வரியை போட்டு கொள்ளையடிக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்காமல் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுக்க முடியாது.
அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க