ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

டந்த ஏப்ரல் 14, 2022 அன்று நாடு முழுவதும் மக்கள் 131-வது அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடிய நிலையில், ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்தநாளில் இளைஞர்கள் நடத்திய பைக் பேரணியின்மீது பஜ்ரங் தள் உறுப்பினர்கள் பயங்கரமான தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் அம்பேத்கரிய பதாகைகள், கொடிகள் மற்றும் பைக்குகளை கிழித்து / சேதப்படுத்தின மற்றும் அவற்றின் மீது சிறுநீர் கழித்தனர். கொடிகள் கிழிக்கப்பட்டன, சுமார் 25 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, பேனர்கள் கிழிக்கப்பட்டன, மேலும் இளைஞர்கள் கத்திகள், தடிகள் மற்றும் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தாக்கப்பட்டனர், இதன் விளைவாக நான்கு தலித் இளைஞர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோதும் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்றும் பஜ்ரங் தள உறுப்பினர்கள் அம்பேத்கர் பிறந்தநாள் சுவரொட்டிகளை கிழித்துள்ளனர். இதனையடுத்து, போலீசுத்துறையில் புகார் அளித்தனர்.

ஏப்ரல் 14-ம் தேதி அனுமன் ஜெயந்தியை நடத்த பஜ்ரங் தளமும் திட்டமிட்டு இருப்பதால், முதலில் அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி நடைபெறும் என்றும், பின்னர் பஜ்ரங் தளத்தின் பேரணி நடைபெறும் என்றும் போலீசு தெரிவித்தது.

படிக்க :

♦ ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !

♦ ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ?

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கை மேற்பார்வையிடும் வழக்கறிஞர் மதுசூதனன், “பேரணிக்கு இடையூறு விளைவித்த உறுப்பினர்களின் பெயர்கள் இருந்தபோதிலும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், அம்பேத்கர் ஆதரவாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று போலீசுக் கூறுகிறது; எவ்வாறாயினும், நாங்கள் நீதிக்கான எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

காவி துண்டுடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூச்சலிட்ட ஆண்கள் ஊர்வலத்தை குறிவைத்து பைக்குகளைத் தாக்கினர். இந்த வழக்கில் தற்போது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று பேரணியை நடத்தியவர்களுக்கு எதிரானது, மற்றொன்று பஜ்ரங் தள் உறுப்பினர்களுக்கு எதிரானது. காவிக் குண்டர்களின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்துள்ளது தனது பாசிச முகத்தை காட்டியுள்ளது போலீசு.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜடாப் பாக், “பீம் ஆர்மியின் பேரணி கோட்பாகா சௌக் வழியாகச் சென்றபோது, ​​40-50 பஜ்ரங் தள உறுப்பினர்கள் சட்ட விரோதமாக வாள்கள் மற்றும் தடிகளுடன் கூடியிருந்ததை நாங்கள் கவனித்தோம். அதற்கு பிரசாந்தா போய் தலைமை தாங்கினார். அவர் தள உறுப்பினர்களான பி. ஸ்ரீஹரி, பிரேம் ராஜ் சந்தா மற்றும் மனாஸ் பெசன் ஆகியோரின் பெயரையும் குறிப்பிடுகிறார். மேலும் பேரணியில் கலந்து கொண்ட தலித் உறுப்பினர்கள் பப்லு பெஷ்ரா, ஷங்கர் நாக், டிங்கு உகர் மற்றும் பலரின் பெயரை எப்ஐஆரில் சேர்த்துள்ளது.

பஜ்ரங் தள் உறுப்பினர்களுக்கு எதிரான எஃப்.ஐ.ஆரில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பான பிரிவு 25-ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு எஃப்ஐஆர்களும் ஐபிசியின் 147,148, 341, 294, 336, 427, 353 மற்றும் 149 ஆகிய பிரிவுகள், பொது ஊழியர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும் கலவரம், தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீம் ஆர்மி உறுப்பினர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பைக் பேரணியில் காயமடைந்தவர்களில் ஒருவரான சஞ்சய் குமார், ​​“அம்பேத்காரின் ஆதரவாளர்கள் பேரணிக்குப் பிறகு பஜ்ரங் தள் பேரணி நடைபெறும் என்று பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக போலீசு கூறியது. ஆனால், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் பேரணிக்கு இடையூறு செய்தனர். தலித் இளைஞர்களின் வாகனங்களை குறிபார்த்து அடித்து நொருக்கினர்.

பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது போலீசுக்கு தெரியும் என்று குற்றம் சாட்டிய பீம் ஆர்மி உறுப்பினர்கள் “கடைசியில், மக்கள் கூட்டம் கலைந்தபோது, ​10-12 பேர் கத்திகளாலும் காலி கண்ணாடி பாட்டில்களாலும் பஜரங் தள் உறுப்பினர்களால் தாக்குதலுக்குள்ளானோம்.”

பப்லு பெஷாரா, “இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல். எங்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படவில்லை, மாறாக இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளோம். இழப்பீடு தருவதாக உறுதி அளித்த போதிலும், போலீசார் சமரசம் செய்யும் நோக்கத்துடன் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். பஜரங் தள் உறுப்பினர்கள் எங்கள் இயக்கத்தை நசுக்க விருப்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடிய பீம் ஆர்மி இளைஞர்கள் மீது, பஜரங் தள் என்ற காவி குண்டர் படை தாக்குதல் தொடுக்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே போலீசு ஏன் வழக்கு பதிவுசெய்கிறது. தாக்கதலை இவர்கள் நடத்திவிட்டு, அப்பாவி மக்களை குற்றவாளிகள் என சித்தரிக்க முயற்சிக்கும் ஒரு நடைமுறையை கையாள்கிறார்கள். உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த காவிப் பாசிஸ்டுகளை விரட்டியடிக்க வேண்டியது அவசியம்.


புகழ்
செய்தி ஆதாரம் : The Wire, Countercurrents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க