13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் கடந்த ஜூன் 28 அன்று முதல் உண்ணாவரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுதி முடித்தும் எங்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் பணி வழங்கப்படவில்லை. சரி அதிமுக அரசுதான் வழங்கவில்லை, விடியல் அரசு வந்தால் பணி வழங்கிவிடும் என்று நினைத்தோம் ஆனால் பணி வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
அனைத்து தகுதிகளும் இருந்தும் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளை சீரழித்து தனியார்மயத்தை ஊக்குவிப்பதையே நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது என்பதைதான் இந்த ஆசிரியர்களுக்கு பணிவழங்காமல் கைவிடும் செயல்பாடு நமக்கு உணர்த்துகிறது.
நிரந்தர ஆசிரியர்களை வேலைக்கு எடுக்காமல், தற்போது அக்னிபாத் திட்டம்போல், தற்காலிக ஆசிரியர் பணிக்கு திட்டமிடுகிறது அரசு. போராடும் ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக வேலையில்லாமல் அவதிப்படுகிறோம், அந்த தற்காலிய வேலையையாவது எங்களுக்கு வழங்கு என்று குமுறுகிறார்கள்.
போராட்டத்தில் ஆசிரியர்கள் நம்மிடையே கருத்துக்களை பகிர்த்துக்கொள்ளும் நேர்காணல் வீடியோ :