பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள்.

0

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஷம்ஷீனா (22), இந்து மதத்தைச் சேர்ந்த காவ்யா (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துணிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கோல்தாடி மற்றும் ராம்நகர் கிராமங்களில் முறையே 20 கிமீ தொலைவில் வசிக்கின்றனர்.

ஈத் பண்டிகையின் இரண்டாவது நாளான ஜூலை 12 அன்று, ஷம்ஷீனா காவ்யாவை பிரியாணி விருந்துக்கு அழைத்தார். வழக்கமாக, காவ்யாவின் சகோதரர் அவளை ஷம்ஷீனாவின் வீட்டில் விடுவார். ஆனால் அன்று அவருக்கு வேறு சில வேலை இருந்ததால் காவ்யாவை நடுவழியில் உப்பினங்கடி நகரில் விட்டு சென்றார். ஷம்ஷீனா அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல வந்தாள். ஒரு பேருந்தில் ஏறி ஆத்தூர் நகருக்கு பயணித்த அவர்கள், கோழி வாங்குவதற்காக இறங்கினர். பின்னர் வீட்டிற்கு செல்ல ஆட்டோ ரிக்‌ஷாவின் ஏறினர்.

வீட்டிற்கு வரும் வழியில் மற்றொரு ஆட்டோ தங்களை பின்தொடர்ந்து வருவதை கவனித்தனர். அவர்களது வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட தூரத்தில், அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கினர். பயணிகள் இல்லாத இரண்டாவது ஆட்டோ அவர்களைப் பின் தொடர்ந்து சென்றது. இருசக்கர வாகனங்களில் சிலர் பின்தொடர்வதையும் அவர்கள் கவனித்தனர். அவர்கள் ஒரு கடையில் நின்றபோது, ஒரு நபர் அவர்களை “விநோதமாக” பார்ப்பதைக் கண்டார்கள்.


படிக்க : ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!


அவர்கள் ஷம்ஷீனாவின் வீட்டை அடைந்ததும், பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய 20-30க்கும் மேற்பட்டவர்கள் சில மீட்டர் தொலைவில் திரண்டனர்.

மதியம் 1 மணியளவில், மூன்று போலீஸ் அதிகாரிகள் (இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்) ஷம்ஷீனாவின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அவளது சகோதரர் ஜியாத்தை கேட்டார்கள். அவர் அங்கு இல்லை என போலீசாரிடம் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருக்கு இடையே தொடர் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த இந்துத்துவா கும்பலிடமும் போலீசார் பேசியதாக ஷம்ஷீனா கூறினார்.

காவ்யாவை தங்களுடன் வருமாறு போலீசார் கூறினர். இதற்கு காவ்யா, ஷம்ஷீனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி அங்கேயே இருந்தால் ஷம்ஷீனாவின் குடும்பம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததால் அவள் சென்றாள்.

உப்பினங்கடி நகரில் உள்ள ஆதித்யா ஓட்டலுக்கு தனி காரில் போலீசார் அழைத்துச் சென்றனர். அவளை அங்கிருந்து கூட்டிச் செல்ல அண்ணனை அழைத்தனர். அவளுடைய பெயர், வயது மற்றும் தொலைபேசி எண் மற்றும் அவளுடைய சகோதரனின் தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அவர்கள் சேகரித்தனர்.

அதன்பிறகு, பல்வேறு இடங்களில் இருந்து தனக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக காவ்யா கூறுகிறார். சிலர் மங்களூருவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர் தனது எண்ணை காவல்துறையிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதாகவும், தனது எண் எப்படி கசிந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் ஜூலை 13 அன்று தனது குடும்பத்தினருக்கு போன் செய்து மிரட்டியதாக அவர் கூறினார்.

ஷம்ஷீனாவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த இந்துத்துவா ஆட்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் நான்கு பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று குடும்பத்தினர் கூறினர்.

ஷம்ஷீனா, “இது எனது சகோதரர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பது எங்களுக்கு தெரியவந்தது. அவர் வழக்கமாக சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதால் இந்துத்துவா குழுக்கள் அவரை குறிவைக்க விரும்புகின்றன” என்றார். முகமது இர்ஷாத் ஒரு சுதந்திர ஊடகவியலாளர். அவர் @shaad_bajpe இல் ட்வீட் செய்கிறார்.


படிக்க : கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !


“எனக்கு இப்போது உயிருக்கு பயம். பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், ‘ஜியாத் ஊருக்கு வரட்டும், அவரை விட மாட்டோம்’ என்று கூறுவதாக செய்திகள் பரவி வருவதாக எனது சகோதரி கூறினார். சமீபத்தில் பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பும் கட்டுரைகளை முகநூல் மற்றும் எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தேன். இதனால் எனது ஊரில் உள்ள ஒரு இந்துத்துவா குழு என்னை குறிவைத்து என் மீது புகார் கொடுக்கவும் முயற்சிக்கிறது. அது பலனளிக்காதபோது, இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி என்னை சிக்க வைக்க முயன்றனர்” என்று ஷம்ஷீனாவின் சகோதரர் ஜியாத் கூறினார்.

போலீஸ் வரும்போதுதான் ஊரில் இருந்திருந்தால் கதை வேறுவிதமாக முடிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்துத்துவா குழுக்கள் கடலோர கர்நாடகாவில் செயல்படுகின்றன. அவர்கள் இருவேறு சமூகங்களுக்கிடையிலான உறவுகளை வெறுக்கிறார்கள். கடந்த காலங்களில், காவ்யா மற்றும் ஷம்ஷீனாவின் நட்பு சாதாரணமாக கருதப்பட்டிருந்தாலும், வகுப்புவாத முனைவாக்கம் இந்த உறவுகளை தடுக்க முயற்சிக்கிறது என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள். மிரட்டல் விடுவார்கள். இந்த மனிதத்தன்மையற்ற பாசிச குண்டர்களை நாம் ஒன்றியணைந்து அடித்து விரட்ட வேண்டியது அவசியம்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க