ஜி.எஸ்.டி வரி விதிப்பை விமர்சித்ததற்காக பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட நிருபர்கள்!

பாசிஸ்டுகள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக தான் ஆளும் மாநிலங்களில் எந்தவித கருத்து சுதந்திரத்திற்கும் இடமளிக்காமல், ஓர் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது.

0

மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சல்சித்ரா அபியான் என்ற ஊடகத்தில் பணிபுரியும் நிருபர்கள், ஜூலை 20 அன்று சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) விகிதத்தின் சமீபத்திய உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்து பதிவிட்டதற்கான தாக்குதலுக்குள்ளானர்.

நிருபர்கள் – ஷாகிப் ரேங்க்ரெஸ் மற்றும் விஷால் ஸ்டோன்வால் – உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள கிஷன்பூர் பரல் கிராமத்தில் செய்தி சேகரிக்க சென்றபோது ஒரு நபர் அவர்களின் உபகரணங்களை பறிக்க முயன்றார். அங்குள்ள உள்ளூர் மக்களிடம் செய்தி சேகரித்ததற்கான அவர்களை மிரட்டினார்.

சல்சித்ரா அபியான் நிறுவனர் நகுல் சிங் சாவ்னி ட்விட்டரில் இந்த சம்பவத்தை விவரித்தார், “இது இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைந்திருக்கும் நிலை. நிருபர்களைத் தாக்கியவர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் என்றும் அவர் “வன்முறையில் ஈடுபட்டார்” என்றும் குற்றம் சாட்டினார்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர்கள் இவ்வாறு தாகப்படுவது இது முதல் முறையல்ல; சல்சித்ரா அபியானுடன் பணிபுரியும் பல நிருபர்கள் பாதிக்கப்படக்கூடிய சிறுபான்மை சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்களை இலகுவான இலக்குகளாக மாற்றியது என்று கூறினார்.


படிக்க : அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!


ஸ்டோன்வால் – ஒரு முன்னாள் செங்கல் சூளைத் தொழிலாளி; ரேங்க்ரெஸ் – முசாபர்நகரில் 2013 வகுப்புவாத கலவரங்களில் இருந்து தப்பியவர். இரண்டு நிருபர்களும் ஜிஎஸ்டி உயர்வின் பாதிப்புகள் குறித்து உள்ளூர் கிராம மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த நபர் அவர்களைத் தாக்கி, அவர்களின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனைப் பறிக்க முயன்றுள்ளார்.

“நாங்கள் வெளியேறுவது நல்லது என்று அவர் எங்களை மிரட்டினார். நாங்கள் செய்தி சேகரிக்க முடியாமல் தடுக்கப்பட்டோம். அந்த நபர் நாங்கள் அரசாங்கத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்” என்று ரேங்க்ரெஸ் கூறினார்.

இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, டிஜிட்டல் செய்தி வெளியீடுகளின் அமைப்பான DIGIPUB – Rangrezz மற்றும் Stonewall-க்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், பாரதிய ஜனதா ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் வன்முறை மற்றும் மிரட்டல் மூலம் தங்கள் வேலையைச் செய்வதிலிருந்து பலமுறை தடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அந்த அமைப்பு எடுத்துக்காட்டுகிறது, வட மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரம் “குறிப்பாக பலவீனமாக உள்ளது” என்று குறிப்பிட்டது.

“உத்தரபிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் மீது அடையாள தெரியாத ஆசாமிகளால் மீண்டும் மீண்டும் மிரட்டல் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DIGIPUB, மாநில அரசாங்கத்தை “ஒரு ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமான பத்திரிகையின் முக்கிய பங்கு குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கும் நபர்களை சட்டத்தின் முழு பலத்துடன் கையாளவும் அழைப்பு விடுத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச போலீசுத்துறையை அது வலியுறுத்தியுள்ளது.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


ஜி.எஸ்.டி வரி மூலம் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, உழைக்கும் மக்களிடம் செய்தி சேகரிப்பது பெறும் குற்றமா? பாஜக உறுப்பினர்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை உ.பி.யில் யோகி அரசு வழங்கியுள்ளது என்பதைத்தான் இப்பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.

பாசிஸ்டுகள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக தான் ஆளும் மாநிலத்தில் எந்தவித கருத்து சுதந்திரத்திற்கும் இடமளிக்காமல், ஓர் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. இந்த பாசிச சக்திகளை முறியடிக்க பத்திரிகையாளர்கள்-முற்போக்காளர்கள்-புரட்சிகரசக்திகள்-உழைக்கும் மக்கள் ஆகியோர் ஓரணியில் திரள்வேண்டிய தருணமிது.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க