அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!

பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது.

0

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூலை 18 அன்று தேசிய பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (NAJ) மற்றும் டெல்லி யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்டுகள் (DUJ) ஆகியவை கூட்டாக செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

சுயாதீன பத்திரிகை மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மீதான அதிகரித்து வரும் தடைகள் “நிரந்தர அவசரகால நிலையை பிரதிபலிக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படும் அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 குறித்து அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 1867-ம் ஆண்டின் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டம் சட்டத்தை மாற்றியமைக்கும் மற்றும் அதன் வரம்பு டிஜிட்டல் ஊடகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

2019-ம் ஆண்டில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அதே பெயரில் ஒரு வரைவு மசோதா வெளியிடப்பட்டது. இது டிஜிட்டல் செய்தி ஊடக வெளியீட்டாளர்கள் (இணையம் அல்லது கணினிகள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பக்கூடிய செய்திகள் என சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது) இந்திய செய்தித்தாள்களின் பதிவாளரிடம் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


படிக்க : யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !


இந்த அறிக்கை, Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைரைப் பற்றி குறிப்பிடுகிறது. அவருக்கு எதிரான அரசின் நடவடிக்கை மற்றும் பல முதல் தகவல் அறிக்கைகள் (FIR) “அப்பட்டமாக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கை” என்று விவரிக்கிறது.

1983-ம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். யதி நரசிங்கானந்த், பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப்; முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் அவர்கள் அனைவரும் “வெறுக்கத்தக்கவர்கள்” என்று அவர் பதிவிட்டதற்கான குற்றச்சாட்டுக்கு ஆளானார். அடுத்தடுத்த மாதங்களில், உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்து அவருக்கு எதிராக மொத்தம் 6 FIR-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (CPJ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொடர்ந்து போராடி வரும் தீஸ்டா செதல்வாட் மீதான அரசின் நடவடிக்கையை அந்த அறிக்கை கண்டிக்கிறது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நரேந்திர மோடிக்கு க்ளீன் சிட் வழங்கியதை எதிர்த்து, மறைந்த காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் செதல்வாட் கைது செய்யப்பட்டார்.

அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு பத்திரிகையாளர் கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பன் ஆவார். அவர் 2020-ல் ஹத்ராஸுல் பாலியல் வன்கொலைக்கு செய்திக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தேசத்துரோகம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.


படிக்க : சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !


ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகள் அல்லது பதிவுகளுக்காக தன்னிச்சையான கைதுகளில் இருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் தேவை என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

2020-ல் மத்திய அரசு இயற்றிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை தொழிற்சங்கம் அமைப்பது, வேலைநிறுத்தம் செய்வது மற்றும் ஊதியம் கோருவது ஆகியவற்றை கடினமாக்கியது. அவற்றை “தொழிலாளர் விரோத கொத்தடிமைகள்” என்று கூறும் அந்த அறிக்கை, பத்திரிகையாளர்களுக்கு தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமையை மறுக்கின்றன என்று கூறியது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு பதிலாக மீடியா கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் தன்னாட்சி மீடியா கமிஷன் ஆகியவை தொழில்துறையின் வளர்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அறிக்கை முன்வைக்கிறது. “இதுபோன்ற நேர்மறையான முன்முயற்சிகள் இப்போது தேவை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் மீதான அரசாங்கத் தடைகள் அல்ல” என்று அறிக்கை முடிவடைகிறது.

பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது. இது பத்திரிகை – ஊடகத்துறையினர் மீதான ஓர் பாசிச நடவடிக்கையாகும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் பெயரலவிளான ஜனநாயகமும் இனி குழித்தோண்டி புதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க