பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 2014 முதல் 2021 வரை 25,000-க்கும் மேற்பட்ட இணையப் பக்கங்கள், இணைய தளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள் ஆகியவற்றை  தடை செய்துள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2014-க்கும் 2021-க்கும் இடையில் இணையப் பக்கங்கள், இணைய தளங்கள் சமூக ஊடகங்களில் உள்ள பக்கங்கள் உட்பட 25,368 URL-களைத் (வலைத்தள பக்க முகவரிகளை) தடை செய்துள்ளது. 2021-2022-ம் ஆண்டில் 56 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்கள் மற்றும் அவற்றின் சமூக ஊடக கணக்குகளை தடை செய்யவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இவை அனைத்தும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 69 A-ஐ மீறுவதாகக் காரணம்காட்டி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய அரசு பதிலளித்தது.
படிக்க :
“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை !
டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !
காங்கிரஸ் எம்.பி டிஎன் பிரதாபன் “2014 முதல் செய்தி சேனல்கள் எதிர்கொண்ட அரசாங்கத் தலையீடுகள் பற்றிய தரவுகள் மற்றும் விவரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் ?” என்று கேட்டிருந்தார். மேலும், 2014 முதல் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட செய்தி சேனல்கள், செய்தித்தாள்கள், ஊடக தளங்கள், ஆன்லைன் ஊடக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளின் எண்ணிக்கையையும் அவர் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 69 A-ஐ மீறும் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வெளியிட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) அதிகாரம் உள்ளது. 2014-2021 காலகட்டத்தில் இந்த விதிகளின்கீழ் MeiTY-ஆல் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்கள், இணைய தளங்கள், சமூக ஊடக கணக்குகள் போன்றவற்றை உள்ளடக்கிய URL-களின் எண்ணிக்கை 25,368 ஆகும்.
பிப்ரவரி 25, 2021 அன்று தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள் 2021, பிரிவு 69-ல் குறிப்பிடப்பட்டுள்ள டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வதற்கும் அனுமதி வழங்குகிறது. எனவே, “2021-2022-ம் ஆண்டில் 56 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்கள் மற்றும் அவற்றின் சமூக ஊடக கணக்குகளை தடைசெய்ய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பல செய்தி நிறுவனங்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீடியாஒன் ஒளிபரப்பை ஏன் தொடர அனுமதிக்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கத்தை அரசாங்கம் தெரிவித்ததா” என்ற பிரதாபனின் மற்றொரு கேள்விக்கு, “அரசாங்கம் உரிய சட்டம் மற்றும் வகுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியுள்ளது. ‘மீடியாஒன்’ தொலைக்காட்சி செய்தி சேனலின் அனுமதியை ரத்து செய்வது தொடர்பாக முடிவெடுப்பது பற்றி உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது” என்றார்.
படிக்க :
Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல் !
குறிப்பிடப்படாத தேசிய பாதுகாப்புக் காரணங்களின்கீழ் மலையாள செய்தி சேனலான மீடியாஒனை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசின் ஜனவரி 31-ம் தேதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது என்றார்.
ஆபாச இணைய தளங்கள், மஞ்சள் பத்திரிகைகளை, ஆன்லைன் சூதாட்டங்களை, ஆன்லைன் விளையாட்டுக்களை தடைசெய்யாமல் இளைய தளைமுறையினரை சீரழிக்கும் பாசிச மோடி அரசுதான், இணைய ஊடகங்களை, சமூக வலைதளங்களை சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொண்டு மற்ற அரசியல் ரீதியாக பேசும் இணைய மற்றும் சமூக ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை தடுத்து வருகிறது.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க