ள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தது அவரது குடும்பத்தை தாண்டி மொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்றால் மிகையில்லை.

மாணவி இறப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்த முறை; பள்ளி நிர்வாகம் நடந்து கொண்ட முறை; மாவட்டம் நிர்வாகம் சமந்தப்பட்ட பள்ளிக்கு அடியாளாக செயல்பட்டதை மாணவியின்  பெற்றோரை அலைக்கழிக்கப்பட்டிதில் இருந்து பார்க்க முடிகின்றது.

இவையெல்லாம் கடந்த ஜூலை 13, 14 தேதிகளில் நடந்த நிகழ்வுகள். இதன்பிறகு போலீசு மற்றும்  மாவட்ட  நிர்வாகம் மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்துவது அல்லது கட்ட பஞ்சாயத்து மூலம் சரி கட்டிவிடலாம் என்ற எத்தணிப்பு ஸ்ரீமதியின் அம்மா மற்றும் மக்கள் போராட்டம் மூலம் முறியடிக்கப்பட்டது.

இறப்பு என்பதே துயரம்தான்; அதுவும் படிக்கும் இளம் மாணவி என்றால் விளக்கி சொல்லத்தான் வேண்டுமா? சரி இன்றைக்கு விவகாரம் எப்படி போய்க் கொண்டுருக்கிறது?


படிக்க : கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !


உடனடியாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டுயிலில் நிறுத்தி வைப்பு என்ற மாபெரும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது  நாம்  பிரச்சினையை  அரசியல் ரீதியில் பாப்போம்.

தமிழகத்தில் 4500-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருப்பதாக அறிய முடிகின்றது (இவைகளின்  ஆண்டு  வருமானம் எத்தனை இலட்சம் கோடி என்பதை வாசகர்களே முடிவு செய்யலாம் ஏனெனில் இன்றைய தகவல் உலகில் யாரும் மதிப்பிடு செய்யலாம்.) அறிவை தரும் கல்வியானது பச்சையாக சொல்வதுதென்றால் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றியிருக்கும் தனியார்மயம்.

இதற்கு சட்டப்பூர்வ அங்கிகரத்தை தனது சட்டங்கள் மூலம் வழங்கியிருப்பது அறிவிற்கும், இயற்கை நியதிக்கும் எதிரானுதான். அமைதி பூங்கவனா தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதாக அஞ்சி ஒலமிடும் ‘அறிவாளிகளே’ நாங்களும் இதைத்தான் கேட்கிறோம். அமைதியான அன்பிற்குரிய தமிழக – இந்திய உழைக்கும் மக்கள் மீது தனியார்மயத்தை திணித்தீர்களே அது இன்றைக்கு  மக்களின் வாழ்வாதாரத்தையும் – உரிமைகளையும் பறித்த வண்ணம் இருக்கின்றதே! இதற்குகென்ன உங்கள் பதில்?

“ஒவ்வொரு முரண்பட்டிற்கும் ஒரு நிகழ்ச்சிபோக்கு இருக்கின்றது” என்றார் பேராசன் மாவோ. இந்த விதி இன்றைய உலகமயமாக்களுக்கும் பொருந்துகிறது. இலாபம் ஒன்றே நோக்கமாக கொண்டுள்ள முதலாளிதத்துவம் அதன் கொள்கைகள், விதிமுறைகள், பிற நியாய வாதங்கள் அனைத்தும் பெருவாரியானோரை துன்பத்தில் ஆழ்துவதை அடிப்படையாக கொண்டிருக்கின்றது. இதன் நிகழ்ச்சிபோக்கானது ஆலையில் பணிபுரியும் தொழிலாளி, விவசாயி, தனியார் பள்ளி மாணவன் இன்னும் பிற உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கின்றது. (இந்த கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டபடி) கொள்ளையடிக்க வழங்கப்பட்ட அனுமதியானது கொலை செய்யவும் கொண்டு செல்கிறது.

இதன் எதிர் முனையான ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கு நியூட்டனின் மூன்றாம் விதியை பிரேயோகிப்பதற்கான கால சூழலையும், வாய்ப்பையும் தந்துவிட்டு பிறகு எப்படி தவறு என சொல்ல முடியும்? ஏழாம் அறிவை போதித்த தலைமைச் செயாலாளர் திருவாளர் இறையண்புவிற்கு, மாணவியின் தாயார் மற்றும் மக்கள் எழுப்பிய அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் குற்றவாளியாக தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தின் அறிவாளிக்கு பிரச்சினையின் வேரும் அடிப்படையும் தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை.

பெரும் திரளான மக்கள் போராட்டம் இளைஞர்களின் அறச்சிற்றத்தை சிறுமைப்படுத்தி, இலக்கற்ற கலவரக்காரர்களாக சித்தரிக்கும் போலீசு கும்பல் இந்த போராட்டத்திற்கு காரணமானவர்களையும், வாட்ஸ்ஆப் குழுக்களையும், அமைப்புகளையும் கண்காணிக்கின்றோம் இப்படியெல்லாம் பேசும் GDP சைலேந்தரபாபு என்ன சொல்ல  வருகின்றார்? இதுபோன்ற அநீதிக்கெல்லாம் மக்களும் இளைஞர்களும் போராடக்கூடாது என்கிறார். ஆளும் வர்க்க அதிகாரிகள், ஆட்சியாளார்கள், அறிவாளிகள் யாவரும் சொல்லும் நியாயம் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது.

“முதலாளித்துவ உற்பத்தி முறை தனி நபர் சுவிகரிப்பை அடிப்படையாக” கொண்டிருப்பதை மட்டும் மார்க்ஸ் சொல்லவில்லை அதன் மேற்கட்டுமானமான அரசியல், நீதி, நிர்வாகம், கல்வி உள்ளிட்ட அனைத்தும் பெருவாரியான மக்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றது என்றார். இந்த நிகழ்ச்சிப்போகின் தொடர்ச்சிதான் ஸ்ரீமதி உள்ளிட்டவர்களின் மரணங்கள். வாட்ஸ்அப் குழுக்களும் அமைப்புகளும்தான் போராட்டத்திற்கு காரணமென சொல்லும் போலீசின் புலானாய்வு மேம்போக்கானது, அடிப்படையற்றது.

***

மகளை  பறிக்கொடுத்த மாணவியின் பெற்றோர் நீதிமன்றங்களை அணுகியபோது “உங்களுக்கு நீதிமன்றத்தின் நம்பிக்கை இல்லையா”? என கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஷ் குமார் அங்கே போராடுகின்றீர்களே என சுட்டிகாட்டும் விதத்தில் பேசிய நீதிபதிக்கு குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் கள்ளமௌனம் குற்றமாக தெரியவில்லை.

ஒரு வாதத்திற்கு தற்கொலை என வைத்துக் கொண்டாலும் நீட்டை எதிர்க் கொள்ளும் மாணவர்கள் முதல் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.

நீதிகேட்டு நீதிமன்றம் சென்ற மாணவியின் அப்பாவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பே போதுமானது அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆகையால், அங்கே நீங்கள் முறையிட்டுக் கொள்ளுமாறு தள்ளிவிட்டது உச்சநீதிமன்றம். மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி மாணவியின் அப்பாவிடம் “உங்களுக்கு இந்த நீதிமன்றம், அரசமைப்பின் மீது நம்பிக்கை இல்லையா? இறந்த உடலை வைத்துக் கொண்டு அரசை மிரட்டுகின்றீர்களா”? என காட்டமாக பேசிய நீதிபதி தனது உத்தரவில் இரண்டு முறை பிரேத பிரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்குழு பிரிசோதித்து அறிக்கை தரவேண்டும் என்றும் மாணவியின் உடலை 23.07.2022 காலை பெற்று அமைதியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றார்.

ஆக அதிஉயர்ந்த நீதிமன்றங்கள் இரண்டும் இவ்விசயத்தில் ஒரு தலை பட்சமாகவும் பிரச்சினையை வெறும் தற்கொலை நிகழ்வாகவும் அல்லது அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்டதின் மூலம் தனியார்மயக் கொள்ளயை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளின் வாயிலாக உத்தரவிடுவது ஒரு விகையில் நீதிமன்றம் பாசிசம் எனலாம்.

***

உலகமயமாக்கால் கொள்கை நடைமுறைக்கு வந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் வளர்ச்சி என்பது எங்கும் இல்லை. இன்றைய தகவல் உலகில் இதற்கான விவரங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருப்பதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்று சேரும்போது ஆர்டிக்ஸ் வெடியை காட்டிலும் மக்களின் குமறல் வெளிப்படுகிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


மறுபுறம், இந்த போராட்டதில் கைதாயிறுக்கின்ற 400-க்கும் மேற்பட்டோரில் இளைஞர்கள் (அதிகம் அரசு சிறுவர்கள் என சொல்வோரும் இளைஞர்கள்தான்) இப்படிப்பட்ட இளைய தலைமுறை அநீதிக்கெதிராக வீதிக்கு வந்துருப்பது வரவேற்க வேண்டிய அம்சம் என்பதுடன், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை காட்டும் கூறாகவும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையான போலீசு வாட்ஸ்ஆப் குழுக்களை கண்காணித்து கொண்டிருக்கட்டும் அவர்களால் அறிவியிலின் வளர்ச்சிப் போக்கை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையின் மக்கள் பேரெழுச்சியும் தமிழகத்தில் மாவட்டம் ஒன்றில் நடந்தேறிய மக்கள் எழுச்சியும் அளவில் –தன்மையில்-குறிக்கோலில்- வேறுபாடு கொண்டிருந்தாலும் தனியார்மயமாக்களுக்கு, உலகமயமாக்களுக்கு எதிரானதில் ஒன்றுபடுகிறது.

இந்த இரு போராட்டாங்களும் தன்னெழுச்சியாக அமைக்கப்படாமாலும் நடந்ததேறியிருக்கிறன. இப்போது நாம் செய்வதெல்லாம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் வர்க்க பிரிவினரை அரசியல்படுத்தி அமைக்கப்படும் பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுப்படுத்துவதின் வாயிலாகத்தான் இப்படிப்பட்ட அநீதிக்கு முடிவுகட்டுவது துவக்கமாக இருக்கும்.

ஆ. கா. சிவா,
மாநில ஒருங்கிணைப்பு  குழு  உறுப்பினர்,
பு.ஜ.தொ.மு.
22.07.2022

2 மறுமொழிகள்

 1. உங்களுக்கு சில கேள்விகள்

  1. எங்கள் மண்ணிற்கு சம்பந்தம் இல்லாத வெறுப்பு மற்றும் வன்மம் நிறைந்த பாசிச கம்யூனிசத்தை எங்கள் மீது திணிக்க பார்க்கிறீர்களே இது எந்த வகையில் நியாயம் ?

  2. சீனாவின் நலனே எங்களின் நலனாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களின் கம்யூனிச துரோகத்தை ஏன் எங்கள் மீது திணிக்க பார்க்கிறீர்கள் ?

  3. மனிதனை மனிதனாக பார்க்காமல் ஆண்டான் அடிமைகளாக பிரித்து அடிமைகளுக்கு என்று சட்டங்கள் கொண்டு இருக்கும் இரு மேற்காசிய மதங்களை எங்கள் மீது திணிக்க பார்க்கிறீர்களே இது எந்த வகையில் நியாயம் ?

  4. ஒரு அடிமைக்கு பிறக்கும் பச்சை குழந்தையும் பிறப்பில் இருந்தே அடிமை என்று சொல்லும் உங்கள் மேற்காசிய மதங்கள் எங்களுக்கு எதற்கு ?

 2. //அநீதிக்கெல்லாம் மக்களும் இளைஞர்களும் போராடக்கூடாது// அப்படி என்ன அநீதிக்கு எதிராக நீங்கள் போராடி விட்டிர்கள் என்று கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும் ?

  தஞ்சை மாணவி படித்த பள்ளிக்கூடமும் தனியார் பள்ளி கூடம் தானே ?

  படிக்க வந்த மாணவியின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி மதம் மாற சொன்னது எந்த வகையில் நியாயம் ?

  கொடுமை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கிடைக்க என்ன செய்திர்கள் ?

  அதர்மவாதிகளான (மனித விரோதிகளான) நீங்கள் எல்லோரும் சேர்ந்து தஞ்சை மாணவிக்கு நடந்த அநீதியை மூடி தானே மறைத்தீர்கள் ?

  நீங்கள் அராஜகவாதிகள், உங்களிடம் நேர்மையும் இல்லை மனிதாபிமானமும் இல்லை. உங்களிடம் இருப்பது போராட்டம் என்ற பெயரில் மனிதவிரோத வக்கிர மனநிலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க