சில மாதங்களுக்கு முன்பு பின் வரும் ஆட்டோ வாசகம் பலரின் கவணத்தை ஈர்த்தது அது இதுதான் “இயற்கை சீற்றங்கள் மூலம் பஞ்சத்தால் தீவரவாதிகளின் தாக்குதலால் மக்கள் சாக வேண்டியிதல்லை மத்திய அரசு திட்டங்கள் போதும் மக்களை கொல்வதற்கு” இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு ஆதரவுடன் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகத்தில் இரண்டாவது புதிய விமான நிலையம் எங்கே அமையவிருக்கின்றது என்ற கேள்விக்கு அத் – துறையின் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரந்துர் ( இந்த கிராமத்தின் பெயரை தாங்கி இருப்பதுடன் பரந்துர் ஏகனத்துர் உள்ளிட்ட 13 கிராமங்கள் மொத்தம் 4000 ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் மூன்று கிராமங்களின் குடியிருப்புகள் ஆதாவது ஆறாயிரம் வீடுகள் பாதிக்கப்பட இருக்கின்றன.) கிராமத்தில் வரவிருக்கின்ற புதிய விமான நிலையம் ரூ 20000 கோடி மதிப்பில் அமையவிருக்கின்றன என அதிகாரப்புர்வமாக அறிவித்தார்.
மேற்படி புதிய விமான நிலையம் அமைக்க தமிழகத்தில் நான்கு இடங்கள் பரிசிலைனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1.படாளம் 2.திருப்போருர் 3.பரந்துர் ( காஞ்சிபுரம் ) 4. பன்னுர் (திருவள்ளுர் ) பரந்துர் தேர்வு செய்யப்பட்டதின் பின்னணியை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருங்காட்டுகோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள SEZ சிறப்பு பொருளாதார மண்டலம் இவைகளில் உள்ள பல நுற்றுக்கணக்கான அந்நிய பண்ணாட்டு நிறுவனங்கள் செயல் படுகின்றன.
படிக்க : 12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து யாருக்காக விமான நிலையம்?
அமையவிருக்கின்ற புதிய விமான நிலையத்திற்கும் தொழிற்சாலை பகுதிக்கும் அரை மணி நேர பயனத்தில் சென்று விடலாம். கார்ப்ரேட் முதலாளிகளின் விருப்பமும் இலக்கும் இதுதான் தன்னுடைய சுக போகத்திற்கும் தனது உற்பத்திக்கான உதிரி பாகங்களை இறக்கு மதி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் புதிய விமான நிலையம் வாய்ப்பாக இருப்பதோடு இதன் மூலம் அந்நிய மூலதனம் பெருகும் இதன் விளைவாக பல ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு பெருகும் மாநில வளர்ச்சிக்கான புதிய படிக்கட்டு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பயனத்தின் மற்றொரு மைல்கல் என வரவேற்கின்றார் தமிழக முதல்வர்.
அந்நிய மூலதனம் குறித்தும் அதனால் ஏற்கெனவே உருவான வேலை வாய்ப்புகளோ சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதுடன் உரிமைகளை பறிப்பதில் ஈவு இரக்கமற்ற முறையில் அடக்கு முறைகளை செலுத்தி பெரும் திரளான தொழிலாளர்களை கொத்தடிமையாக்கிருக்கின்றன.
சான்றாக HYUNDAI நிசான் டைம்லர் செயின்ட் கோபின் இன்னும் பிரசித்திப் பெற்ற ஆலைகளில் என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது ? நீம் மற்றும் ஒப்பந்த முறையிலான வேலைகள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பணி பாதுகாப்பு சமூக பாதுகாப்பு ஏதும் இல்லாத நிலையில் பிழைப்புக்கு ஒரு வேலை என மனம் நொந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அடுத்து நாம் விமான நிலையம் அமையவிருக்கின்ற பகுதியை சற்று பார்ப்போம் தமிழகத்திலே ஏரிகளும் – குளங்களும் நிறைந்து நீர் நிலைகள் பாதுகாப்பதில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னுதாரணம் என்பதுடன் அதற்குறிய கட்டமைப்பை பெற்றுருப்பதல்தான் தொழிற்சாலைகள் பெருகின.
பரந்துர் ஏகானத்துர் உள்ளீட்ட சில கிராமங்களை சுற்றி ஏரிகளால் சூழப்பட்டு விவசாய நிலங்கள் இருப்பதால் தண்ணீருக்கு பிரச்சனை இல்லை இப்போதும் 20 – 30 அடி ஆழத்திலே தண்ணீர் இருப்பதை பெருமையுடன் குறிப்பிடும் அப் – பகுதி மக்கள் நாங்கள் முப்போகமும் விவசாயம்தான் செய்கின்றோம் அதுதான் எங்கள் வாழ்வதாரம் அதனை பறித்து விட்டால் நாங்கள் எப்படி வாழ முடியும் …? என கேள்வியெழுப்புகின்றனர்.
தொழிற்சாலை விமான நிலையம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் கை நிறைய சம்பாதிக்கலாமே என கேட்ட போது இவ்வளுவு கம்பெனிங்க இருந்தும் எங்களுக்கு வேலை இல்லை ஏன் என்றால் நாங்கள் உள்ளுர்காரார்கள். அதையும் தாண்டி சிலர் வேலைக்கு செல்கின்றனர் ஆண்கள் என்றால் காண்டிராக்ட் வேலை பெண்களுக்கு ஹவுஸ் கீப்பிங் கார்டன் பராமரிப்பது போன்ற வேலைகள்தான் செய்கின்றோம் என்றனர்.
விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாமல் போவதால் கடன் அடைக்க பிள்ளைகளை படிக்க வைக்க மாதம் குறைந்த பட்ச வருமானம் தேவையாக இருப்பதால்தான் கம்பெனி வேலைக்கு செல்கின்றோம் இல்லையெனில் அந்த பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டோம். என்றனர்.
அப்படியனால் உங்கள் கவலைகளை அரசுக்கு தெரிவித்திர்களா ? எனக் கேட்ட போது எங்களின் வாழ்வதாரம் பாதுகாக்க வேண்டுமனால் புதிய விமான நிலையம் இந்த பகுதியில் அமைப்பதை கைவிடக் கோரி காஞசிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் கடந்த நிலையில் உங்கள் கோரிக்கை ஏற்க்க தக்கது அல்ல நிராகரிக்கின்றோம் என பதில் வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றனர்.
இது குறித்து ஆட்சியர் பிற அதிகாரிகள் ஏதாவது சொன்னார்களா என்ற போது இது வரையில் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை தமிழக அரசு எதுவும் அதிகாரப்புர்வமாக அறிவிக்கவில்லை என சொன்னதாக தெரிவித்தனர். அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனமான இந்த பேச்சை என்வென்று சொல்ல ? முதல்வர் ஸ்டாலின் புதிய விமான நிலைய திட்டத்தை மாநில வளர்ச்சிக்கான படிக்கட்டு என வர்னிக்கின்றார்.
மறுபுறம் ஜீலை மாதம் 26 அன்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார் கூட்டத்தின் முடிவில் பரந்துர் மற்றும் பன்னுர் ( திருவள்ளுர் ) ஆகிய இரு இடத்தில் ஏதாவததொன்று இறுதி செய்யப்படும் என்பதால் புதிய விமான நிலையம் வரவிருக்கும் பகுதி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துருப்பதாக தெரிவித்தார். ( செய்தி ஆதாரம் ஆகஸ்ட் 03 தமிழ் இந்து )
படிக்க : லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!
உண்மை இப்படியிருக்க அரசு அதிகாரப்புர்வமாக அறிவிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய மோசடி அறிவிக்கவில்லை என்பதுதான் பிரச்சனையா ? அந்த திட்த்தை அரசின் சார்பாக முதல்வர் ஆதிரிகின்றார் பிரச்சனை. புதிய விமான நிலையம் அல்லது தொழிற்சாலைகள் வந்தால் இந்த நாட்டின் கோடிக்கானக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரம் கெளரவமான வாழ்க்கைகு உத்ரவாதம் என்பது போல ஆட்சியாளர்கள் அதிகாரவர்க்கம் பேசுவது திராவிட மடலின் அங்கமான பகுத்தறிவுக்கு எதிரானது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் நமக்கு வேலையளிப்பது அல்ல மாறாக கொள்ளையடிப்பதுதான். இதற்கு வேலையளிப்பது என்ற முகமமூடி அரசின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப் படுகிறது.
அடுத்து பெரும் கார்ப்பரேட் நிறுவங்கள் கொள்ளைக்கு அடியாளாக வேலை செய்யும் மத்திய – மாநில அரசிற்கும் மோடிக்கும் – ஸ்டாலினுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ? கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் மற்றும் அரசு சொல்லும் முன்னேற்றம், வளர்ச்சி, நாடு வல்லரசாகுகின்றது இனி யாரவது சொன்னால் முகத்தில் காரி உமிழ்வோம்.
நோக்கியா போர்டின் துரோகமும் தொழிலாளர்களை நட்டாற்றாறில் விட்ட நயவஞகமும்தான் நீங்கள் சொல்லும் வளர்ச்சியின் அளவுகோல். எனவே பறந்துர் புதிய விமானம் நிலையம் வருகை என்பது நமது வளத்தை வாழ்க்கையை சுற்றத்தை அழிக்கும் கொடூர திட்டம். திராவிட மாடலின் சமூக நீதி கார்ப்பரேட் வளர்ச்சியை உள்ளடக்கியது மக்களுக்கோ (பெண்களுக்கு) இலவச பேருந்து போன்ற குச்சி மிட்டாய் கணக்காய் சில்லறை சலுகைகளை வழங்க கூடியது. இப்படிப்பட்ட துரோகத்திற்கு முடிவு கட்ட மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரள்வோம்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
மக்கள் அதிகார தமிழ்நாடு – புதுவை.
Ellarm corporate kaikooligal tha
சீனாவிற்காக இந்தியாவின் வளர்ச்சியை குலைப்பதில் அனைத்து கம்யூனிஸ்ட்களும் ஒன்று தான்.