இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!

விவசாயிகளின் இடுபொருள் செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதானி குழுமத்தின் கொள்முதல் விகிதங்கள் குறைப்பது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்

0

திகரித்து வரும் உள்ளீடு செலவுகள் மற்றும் குறைந்து வரும் வருமானம் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் விவசாயிகள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்துடன், பேக்கேஜிங் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பால் பகுதியைச் சேர்ந்த ஆப்பிள் விவசாயி ஜெகதீஷ் கிம்தா, அதானி குழுமத்திற்கு தனது விளைப்பொருட்களை விற்றதன் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.60-62க்கு மேல் பெறவில்லை. இந்த சீசனில் அவர் எதிர்பார்த்ததை விட அவரது சம்பாத்தியம் குறைவாகவே உள்ளது என்று கூறினார்.

“ஆப்பிள் பயிரை ஆண்டு முழுவதும் தங்கள் குழந்தையைப் போலவே விவசாயிகள் கவனித்துக் கொள்ள வேண்டும். சந்தை முதலாளிகளின் மிகக்குறைந்த கொள்முதல் விகிதம் எங்களுக்கு வேதனையளிக்கிறது” என்று கிம்தா கூறினார்.


படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!


பல்வேறு காரணங்களால் ஆப்பிள் பயிரின் விலையும் வெளிச்சந்தையில் குறைந்துள்ளது.

முதலாவதாக, இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தி அதிகமாக இருந்தது. எனவே, சந்தை முதலாளிகள் விவசாயிகளுக்கு குறைந்த விலையை கொடுத்துள்ளனர்.

இரண்டாவதாக, இந்த ஆண்டு அதிக வெப்பம் காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. நிறமாற்றம் மற்றும் ஆப்பிளின் வளர்ச்சி குன்றியது. சிவப்பு தோல் நிறம் மற்றும் ஆப்பிளின் அளவு ஆகியவை விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்துடன் தொடர்புடையது.

கடந்த வாரம் ஜூலையில் சீசன் தொடங்கியவுடன், பேக்கேஜிங் பொருட்கள் மீதான உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டிக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

மாநில அரசுக்கு எதிராகப் போராடிய பின்னர், ஆப்பிள் உற்பத்தியாளர்கள், அதானி குழுமத்தின் கிளைகளில் ஒன்றான அதானி அக்ரோஃப்ரெஷ் நிறுவனத்திற்கு, பழங்களை கொள்முதல் செய்வதற்கான விலையை மாற்றுவதற்கான இறுதி எச்சரிக்கையை செய்தனர்.

சன்யுக்த் கிசான் மஞ்ச் (SKM) பதாகையின் கீழ், ஆகஸ்ட் 25 அன்று சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு, ரேவாலி மற்றும் சைஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள அதானி குழுமத்தின் மூன்று கொள்முதல் மையங்களையும் எதிர்த்தனர். இந்த பருவத்தில் குறைந்த கொள்முதல் விலையை அதானி குழுமம் வழங்குவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். பிரீமியம் தரமான ஆப்பிள்களுக்கான கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.76-க்கு மேல் குறைந்தபட்சம் 30% அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SKM கன்வீனர் ஹரிஷ் சவுகான், அதானி குழும கடைகள் மொத்த உற்பத்தியான 6 லட்சம் டன்களில் 25,000 டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யாமல் இருக்கலாம் என்று கூறினார். ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர்களின் கொள்முதல் விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளிச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. “இந்த ஆண்டு வித்தியாசமாக இல்லை. கொள்முதல் விகிதங்களை அறிவித்தவுடன், சந்தையில் [விலைகளில்] சரிவு ஏற்பட்டது” என்றார்.


படிக்க : நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !


2020-ம் ஆண்டில், அதானி பிரீமியம் தரமான ஆப்பிள்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.88 வழங்கியது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரீமியம் தரமான ஆப்பிள்களுக்கு ஒரு கிலோ ரூ.76 வழங்குகிறது. மாறாக, சுருள் இடுபொருள் செலவைக் கணக்கில் கொண்டால், ஒரு கிலோவுக்கு 90-100 ரூபாய்க்கு இடையில் இருக்க வேண்டும் என்றார்.

“விவசாயிகளின் இடுபொருள் செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதானி குழுமத்தின் கொள்முதல் விகிதங்கள் குறைப்பது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்” என்று அவர் கேட்டார்.

ஆப்பிள் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு குறைந்த விலை கொடுத்து வஞ்சிக்கும் அதானி குழுமம். குறைந்த பட்ச ஆதார விலைக்கோரிக்கைக்காக மோடி அரசை எதிர்த்து நாடுமுழுவதும் போராடி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் விவசாயிகளின் வாழ்க்கையை மேலும் மேலும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுடன் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பரவி வரும் பாசிசத்தை வீழ்த்த களமிறங்க வேண்டிய தருணமிது.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க