இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

ஆப்பிள் விவசாயிகள் தான் அறுவடை செய்யும் ஆப்பிள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசாங்க குளிர் பதனிடும் கிடங்குகள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு செவி மடுத்து கேட்கும் என்பது கேள்விக்குறிதான். 

0

ன்யுக்தா கிசான் மஞ்ச் (SKM)-யின் கீழ் கிட்டத்தட்ட 27 அமைப்புகள் ஒன்றிணைந்து, இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகள் ஆகஸ்ட் 5 அன்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

அரசுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தங்கள் பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதில் தீர்வு கிடைக்காவிட்டால், சிறை நிரப்பு போராட்டம் உள்ளிட்ட பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் எஸ்.கே.எம் கூறியுள்ளது.

பேக்கேஜிங் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பேக்கிங் மெட்டீரியல் மீதான ஜிஎஸ்டியை உயர்த்துவது போன்றவை போராட்டத்தின் கோரிக்கைகளின் அடங்கும். அதிக மானியங்களைக் கோரும் வகையில் உள்ளீட்டுச் செலவுகள் முழுவதுமாக அதிகரிப்பதை மேற்கோள் காட்டி இப்போராட்டம் நடத்தப்பட்டது.


படிக்க : நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !


பல்வேறு பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பல கோரிக்கைகள் முன்பு போலவே இப்போதும் எழுப்பப்பட்டுள்ளன. காஷ்மீர் மாதிரியான ஆப்பிள்களுக்கான சந்தை தலையீட்டுத் திட்டம் கோரப்பட்டுள்ளது. முன்னதாகவே, மாநில அரசு, பெருவணிக நலன்களை ஆப்பிள் வாங்குவதில் அவர்களுக்கு விரைவான என்ஓசிகளை வழங்குவதன் மூலம் எளிதாக்கியது, மேலும் இது ஆப்பிள்களுக்கு அதிக விலையைப் பெற உதவும் என்று கூறியது. இருப்பினும், விரைவில் ஆப்பிள் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் அதிகரித்தன. பெரிய வணிக நிறுவனங்களில் குறைந்த சந்தை விலையை அமைப்பதே உண்மையில் காரணம் என்று புகார் கூறினர். சிறந்த தரமான விளைபொருட்கள் குறைந்த பிரிவில் இடம்பெற்றுபட்சத்தில் குறைந்த விலைக்கு வழிவகுக்கும் என்பதால், பண்ணை விளைபொருட்களின் தன்னிச்சையான தரத்தில் ஏமாற்றப்படுவதாக ஆப்பிள் விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் ஆப்பிள் விவசாயிகளுடன் இமாச்சலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளும் இணைந்து எழுப்பிய மற்றொரு முக்கியமான கோரிக்கை, இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் மீதான சுங்க வரிகளை கணிசமாக உயர்த்துவது தொடர்பானது. சமீபத்தில் நடந்த போராட்டத்திலும் இந்த கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டது.

விளைபொருட்களை எளிதாகக் கொண்டு செல்லுதல், தடையில்லா சந்தைக் கட்டணத்தை நீக்குதல், தோட்டக்கலை வாரியம் அமைத்தல், விளைபொருட்களை வாங்குவதில் தனியார் வர்த்தகம் மற்றும் வணிக நலன்களின் கையாடல்களைத் தடுக்க குழுக்களை அமைத்தல், நிலம் கையகப்படுத்தும் போது சட்டத்தை சிறப்பாகக் கடைப்பிடித்தல் தொடர்பான பிற கோரிக்கைகள் இதில் அடங்குகிறன.

இங்கு ஆப்பிள் பழத்தோட்டக்காரர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர விவசாயிகளும் அதிகரித்துவரும் பாதகமான வானிலையினால் சமீபகாலமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிள் மற்றும் பிற அழிந்துபோகும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் நிலச்சரிவு காரணமாக சில சமயங்களில் தங்கள் இலக்கை அடைவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகள் கெட்டுப்போகின்றன.

இந்தச் சூழ்நிலையில் ஆப்பிள் விவசாயிகளும் கூடுதல் உதவிக்காக அரசாங்கத்தை எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வெளிநாட்டுத் தாவரப் பொருள்கள் மற்றும் ரகங்களின் இறக்குமதி போன்ற சில கொள்கைகளால் இவை சரியாக வளர முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


படிக்க : அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !


மூன்று வேளாண் விரோத சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபம் கொழிக்கும் தொழிலாக மடைமாற்றிவிட முயற்சித்தது. குறிப்பாக, ஆப்பிள் விவசாயிகள் தான் அறுவடை செய்யும் ஆப்பிள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசாங்க குளிர் பதனிடும் கிடங்குகள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு செவி மடுத்து கேட்க்கும் என்பது கேள்விக்குறிதான்.

விவசாய விரோதமாக செயல்படும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசை வீழ்த்தாமல் ஆப்பிள் விவசாயிகளின் வாழ்க்கை விடியாது.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க