20.03.2026

ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” (The Voice of Hind Rajab) எனும் பாலஸ்தீன திரைப்படத்தை வெளியிட பாசிச மோடி அரசு தடை விதித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரின் போது (2024-இல்), காரில் உதவிக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜப்பை இஸ்ரேலின் கொலைகார இராணுவப்படை குழந்தை என்றும் பாராமல் கொடூரமாகப் படுகொலை செய்தது.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொடூர சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்”.

உள்நாட்டில், அரசு ஒடுக்குமுறைகளை காட்சிப்படுத்தும் “சந்தோஷ்” போன்ற திரைப்படங்களைத் தடை செய்யும் பாசிச மோடி அரசு, பாலஸ்தீனத்தில் அரங்கேறும் இன அழிப்பை காட்சிப்படுத்தும் திரைப்படங்களையும் வெளியிட அஞ்சி நடுங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க