கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு: ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது | 20 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு | மருது வீடியோ

ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

ச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் எதையுமே பின்பற்றாமல் இந்த கைது செய்யப்பட்டிருக்கிறது. இப்படி கைது செய்யக்கூடிய அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார். கொலை செய்தாரா? திருடினாரா? இல்லை இவரை விட்டுவைத்தால் சமூகவிரோத செயல்களை செய்வார் என்று ஏதேனும் குற்றச்சாட்டு இருக்கிறதா?

இவர் செய்த காரியம்தான் என்ன? கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துபோனார். அது சம்மந்தமான பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். இப்போது கருத்துக்கள் தெரிவிப்பது தவறு என்றால்? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் இருக்கக்கூடிய பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என்று சொல்ல கூடிய சட்டங்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். எனவே இந்த நாடு ஓர் சர்வாதிகார நாடு என்று அறிவித்துவிட்டால் எங்களை போன்றவர்களோ, ஊடகவியலாளர்களோ பேசமாட்டார்கள்.

ஒரு பக்கம் கருத்துரிமை இருக்கிறது என்று கூறிவிட்டு, இன்னொருபக்கம் கைது செய்யும்போது 11 கட்டளைகளை போலீசு பின்பற்றவேண்டும் என்று சொல்லிவிட்டு, எதையுமே பின்பற்றாமல் செய்யப்பட்ட இந்த கைது நடவடிக்கையை சரி என்று பார்க்க முடியுமா?

ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை சுதந்திரமாக சொன்னதற்கான கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த அரசை எதிர்த்து யார் பேசினாலும் கைது செய்யப்படுவார்கள் என்ற ஓர் அச்சுருத்தல் இருக்கும் போது எப்படி பத்திரிகைச் சுதந்திரம் இருக்க முடியும்.

ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

https://www.youtube.com/watch?v=hRZArtzwOvo

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க