19.09.2022

ஆ.ராசா மீதான
இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை
மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

பத்திரிகை செய்தி

ழைக்கும் மக்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவர்களை வேசி மகன் என்று அழைத்தது ஆரிய பார்ப்பனர்களின் வேதமே!

ஆரிய, வேத, இதிகாச புராண புரட்டுக்களை அம்பலப்படுத்துவதே தமிழர் பண்பாடு!

மனுதர்மத்தில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தி இருக்கிறார்கள் என்பதை விளக்கிப் பேசினார் திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா.

அவருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, இந்து முன்னணி பாசிச சக்திகள் பல்வேறு அவதூறுகளையும் பொய் புரட்டுகளையும் கிளப்பி தாக்குதல் தொடுத்து வருகின்றன.

இந்துக்களை விபச்சாரி மகன் என்று ஆ.ராசா கூறியதாக பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும் நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு செய்ய வேண்டுமென்றும் பாசிச சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்து மதம் மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து வைத்து பிரம்மனின் காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும் அழுக்கில் பிறந்தவன் பஞ்சமன் என்றும் கூறி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை இழிவுபடுத்தும் இந்து மத வேதங்களை அம்பலப்படுத்தியது தவறல்ல.

அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல சித்தர்கள் முதல் வள்ளலார் வரை பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும்.

தமிழ்நாட்டில் வேதம் எப்போது திணிக்கப்பட்டதோ அக்காலத்திலிருந்தே வேத எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது. நால் வர்ணங்களை உருவாக்கிய ஆரியத்துக்கு எதிராகத்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை படைத்தான் வள்ளுவன்.

படிக்க : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்

பறைச்சியாவது ஏதடா பார்ப்பனத்தியாவது ஏதடா என்றார்கள் சித்தர்கள்.

வேத, இதிகாச மரபை எள்ளி நகையாடுவதும் தூக்கி எறிவதுமே தமிழ்ப் பண்பாடு, சுயமரியாதை பண்பாடு.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மீதான தனிப்பட்ட பிரச்சினை அல்ல இது. தமிழ்நாட்டின் மீது தமிழனின் தன்மானத்தின் மீது பாசிச சக்திகளால் விடப்பட்டிருக்கும் சவால்.

ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால்.

ஆரிய – வேத – இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், ஆ.ராசா தெரிவித்த வேத இதிகாசம் எதிர்ப்புக் கருத்துக்களுக்கு ஆதரவாக நாம் களம் இறங்குவதும், தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்ற திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, இந்து முன்னணி பாசிச சக்திகளை விரட்டியடிப்பதும், இந்துமதவெறி பாசிச எதிர்ப்பு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஆகிய நம் அனைவருடைய கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், ஆ.ராசாவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் இந்து மதவெறி பாசிச சக்திகள் உடனடியாக கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.


தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க