பாசிசத்தை முறியடிக்கும் ஒரே ஆயுதம் மக்கள் தான் | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

செப்டம்பர் 17 நடைபெற்ற மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய சிறப்புரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்!

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய போது, சமூகத்தில் பாசிசம் ஊடுருவியிருக்கிறது. பாசிசம் நம்மை சுற்றி பற்றி பரவியிருக்கிறது. தொழிலாளர் இடம்பெயர்ந்து வேலை செய்வது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நாடுவிட்டு நாடு, மாநிலம் மாநிலம் இடம்பெயர்ந்து வேலை செய்கிறார்கள். வட மாநிலங்களிலிருந்து இங்கே வருகிறார்கள். தொழிலாளர்களை நாம் குற்றம் சாட்டவில்லை. வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தமிழகம் சொர்க்கமாக இருக்கிறது. எல்லா தொழில் நிறுவனங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கிராமப்புறங்களில் ஒரு 20 தொழிலாளர்கள் காவி உடைப்போட்டிருக்கிறார்கள் என்றால் அவர் பலியாகியிருக்கிறார்கள் என்றுதான் யோசிக்க வேண்டிருக்கிறது. காளியம்மன் கோயிலில் ஸ்ரீராம் ஜெயம் என்று எழுதுகிறார்கள். அங்குள்ள மாணவர்களுக்கு இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அரசியல் தெரியாது. நாட்டார் தெய்வ வழிப்பாட்டு முறைகளில் இன்றைக்கு பார்ப்பனிய கருத்துகள், இந்து மதவெறி கருத்துகள் ஊடுருவியிருக்கிறது.

கல்வி என்பது தனியார்மயமாக்கப் பட்டிருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் சாகா பயிற்சி நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஒரு மாணவி இறந்த பிறகுதான் அந்த பள்ளியில் சாகா பயிற்சி நடந்தது நமக்கு தெரிந்தது.

ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் எங்கே இருக்கிறார்கள். மாணவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்து கூட ABVP-யில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். இங்கு இருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் நாம் யோசிக்க வேண்டும். இந்து மதவெறி பயங்கரவாதிற்கு சாதகமாக இருக்கிறது. இந்த அரசு இயந்திரம் என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வழிநடத்துவது என்ற நிலையில் இருக்கிறது.

தேர்தல் அரசியலில் இவர்களை வீழ்த்த முடியாது. இந்தியாவில் உள்ள கட்சிகள் எல்லாரும் சேர்ந்து வீழ்த்தினாலும் நிலையாக ஆட்சி நடத்த முடியாது. இந்த அரசு என்பது எவ்வளவு கார்ப்பரேட் நலன் கொண்ட அரசாக இருக்கிறது. இவர்களை களத்தில் நின்று முறியடிக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கட்டி இவர்களை முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.

செப்டம்பர் 17 நடைபெற்ற மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய சிறப்புரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்!

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க