சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் | மருது வீடியோ

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

கீழடி நாகரீகம் வேத நாகரீகத்திற்கு பிந்தையது என்று கருத்துக்கூறும் ஜெயமோகன் வசனம் எழுதி, இஸ்லாமிய மக்களையும், உழைக்கும் மக்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையே இலட்சியமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் இயக்கி, தமிழர்களை இழிவு செய்யும் வகையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கம் இரண்டாம் மொழிப்போரில் எழுந்த போது, அதை கிண்டலடித்து “எலிவலைகள் எலிகளுக்கே” என்று எழுதிய – பொன்னியின் செல்வனை எழுதிய – கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு தமிழின் பெருமையை செல்லிக்கொடுக்க போகிறார்களா?

மணிரத்தினமோ, ஜெயமோகனோ கீழடி வரலாற்றை மறுத்துவிட்டு பொன்னியின் செல்வனை ஏன் வைக்கிறார்கள் என்பதற்குள்ளாகத்தான் ஒரு பார்ப்பன ஆதரவு அரசியலும் இந்த சுரண்டல் அரசியலும் முன்னிலையில் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம்.

பார்ப்பனர்கள் தங்களுடைய மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக கொலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வனில் என்ன வந்துள்ளது, நீங்கள் கதை எழுதினால் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? இந்த ஆதித்த கரிகாலன் சமண மதத்திற்கு ஆதாரவான ஒரு நபராக இருந்திருக்கலாம், தாங்கள் ஒரு மிகப்பெரிய உயர் பதவிக்கு வருவதற்கு அவர் பிற்காலத்தில் தடையாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தின் காரணமாக, இந்த ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை பல ஆய்வாளர்கள் தெளிவாக சொல்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட கருத்துக்கள் அந்த பொன்னியின் செல்வனில் இல்லை.

குறிப்பாக ராஜராஜசோழன் காலத்தில் தனக்கு ஒரு தோசம் இருக்கிறது, அதை கழிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, ஆயிரக்கணக்கான சமஸ்கிரதம் தெரிந்த பார்ப்பனர்களை வட நாட்டில் இருந்து கொண்டு வந்து காவிரி கரையில் – தஞ்சாவூரில் – குடியமர்ந்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன் படி குடியமர்த்துகிறார். அப்போது ஒவ்வொரு கிராமத்திற்கு மகா சபை இருந்தது. இந்த மகா சபைகளுக்கு பார்ப்பனர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற சொல்லப்படாத விதி வகுக்கப்படுகிறது.

தமிழர் பண்பாடாக உயர்த்தப்பட்டு பிறகு ஒரு இந்து பண்பாடாக மாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் அந்த திரைப்படத்தில் இருக்கிறது.

குந்தவை நாச்சியார் பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறுகிறார். ஏன் மாறுகிறார். இங்கே அதிகார போட்டியில் ஒருவரை ஒருவர் மாறிமாறி வெட்டிக்கொண்டு சாகிறார்கள், யார் பெரியவன் யார் சின்னவன் என்ற மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. இதை பார்த்து மனம் புழுங்கி அவர் இஸ்லாமியராக மாறுகிறார்.

மக்கள் மீது அடக்குமுறைசெய்து, அவர்களை பல்வேறு சாதி ரீதியாகவும் மதரீதியாகவும் பிளவுபடுத்தி, நம்மை ஆட்சி செய்துகொண்டு, தன் ஆட்சியை ஒருவர் காப்பாற்றி கொள்கிறார் என்று சொல்லப்போனால் அதை பெருமையாக பேச முடியாது.

பார்ப்பனர்களுக்கு ஆரியர்களுக்கு வாரிக்கொடுத்தான் ராஜராஜசோழன். ஆனால் நிலங்களை எல்லாம் பிடுங்கி உழைத்தால் தான் உனக்கு சோறு என்று சொன்னான் எங்களுடைய மன்னன் திப்புசூல்தான். அதனால் தான் திப்பு சூல்தானை வீழ்த்தவேண்டும், அந்த வரலாற்றை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இரண்டுதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒன்று பார்ப்பனிய அடைமை மரபு, மற்றொன்று பார்ப்பன எதிர்ப்பு மரபு. சதூர் வர்ணம்- நான்கு வர்ணங்களையும் நான் தான் படைத்தேன் என்கிற ஒரு மரபு இருக்கிறது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” என்று இந்த வேதத்தை எதிர்த்து பேசினான் எங்களுடைய வள்ளுவன். அவருடைய மரபு இருக்கிறது. நாம் எந்த மரபை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க