திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....

ணிரத்தினம் மற்றும் அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் இவர்கள் சம்பாதிக்க வேண்டும், புகழ்பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக- ஒரே நோக்கத்திற்காக- எதோ ஒரு கதையை எடுத்து, இந்த கதைதான் தமிழர்களின் வரலாறு என்று காட்டுகிறார்கள்.

இந்த படத்தின் விளப்பரத்தில் ஜெயம் ரவி கூறுவார், நான் சோழ தேசத்தின் காவல்காரன். சோழ மக்களுக்கு வேலைக்காரன் என்று. இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு நியாயமான விசயமாக இருக்கிறதா?

ஒரு மன்னன் எந்த காலத்தில் தன்னை வேலைக்காரன் என்று சொல்லியிருக்கிறான். அப்படி சொல்லியிருந்தால் அவன் மன்னனாக இருக்கமுடியுமா? பொய்யையும் புனை சுருட்டையும் வைத்துக்கொண்டு வரலாற்றை இவர்கள் எழுதுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இந்த பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஒரு மிகப்பெரிய பிராடு! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அந்த நாவலின் ஒரு மையமாக விசயம் என்னவென்றால், ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டுகிறார். அவரை கொன்றது யார் என்பது மிகவும் முக்கியமான அம்சம்.

பார்ப்பனர்களுக்கு ஆதித்த கரிகாலன் கட்டுப்படவில்லை என்ற காரணத்திற்காக பார்ப்பனர்கள் அவரை கொன்றுவிட்டார்கள் என்று பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதனை மறைந்து பாண்டியர்கள் தங்கள் ஒற்றர்கள் மூலம் ஆதித்த கரிகாலனை கொலைசெய்தார்கள் என்ற ஒரு பொய்யை அந்த கதையில் வைத்திருக்கிறார்கள்.

கீழடி நாகரீகம் வேத நாகரீகத்திற்கு பிந்தையது என்று கருத்துக்கூறும் ஜெயமோகன் வசனம் எழுதி, இஸ்லாமிய மக்களையும், உழைக்கும் மக்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையே இலட்சியமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் இயக்கி, தமிழர்களை இழிவு செய்யும் வகையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கம் இரண்டாம் மொழிப்போரில் எழுந்த போது, அதை கிண்டலடித்து “எலிவலைகள் எலிகளுக்கே” என்று எழுதிய – பொன்னியின் செல்வனை எழுதிய – கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு தமிழின் பெருமையை செல்லிக்கொடுக்க போகிறார்களா?

இவர்களுக்கு எதிரான வரலாற்றை, வள்ளலார் முதல் பெரியார் முதல் சித்தர்கள் முதல் நமக்காக உருவாக்கி தந்த பல்வேறு வரலாற்றை நாம் பின்பற்றவேண்டும். பொன்னியில் செல்வனை தூக்கி குப்பையில் வீச வேண்டும்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க