சனாதனத்தின் வீழ்ச்சியே பாசிசத்தின் வீழ்ச்சி! | தொல்.திருமாவளவன் | வீடியோ

“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அதானி - அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய உரையில், இந்தியாவை சூழ்ந்துள்ள பிரச்சினையை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி அடையாளப் படுத்துகிறோம். இந்துத்துவ கருத்துதான் பேராபத்து என்கிறோம். பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.யும் வீழ்த்த வேண்டும். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்.க்கு துணையாக இருக்கும் அம்பானி – அதானியையும் வீழ்த்த வேண்டும் என்பதை மக்களுக்கு புரிய வைக்கதான் இந்த மாநாடு.

பாசிசம் என்பது என்ன? இந்துத்துவம் தானா? இந்துராஷ்டிரம் தானா? சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவர்கள் பரப்பும் அரசியல் தானா? முஸ்லீம் எதிர்ப்பு, கிறிஸ்துவ எதிர்ப்பு? இவை அனைத்தும் உண்டு.

சனாதனம் என்பது தான் பாசிசம். இந்தியாவை பொருத்தவரை பாசிசம் என்றால் சனாதனம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சனாதனம் தானே? எப்படி பாசிசம் என்று கேட்கலாம். ஹிட்லர், ராஜபக்சே, மோடி பின்பற்றும் பாசிசம் எல்லாம் ஒன்று தான்.

ஒரே இனம், ஒரே மொழி அதுதான் ஹிட்லர் வைத்தது. ராஜபக்சே முன் வைத்ததும் அதுதான். சிங்கள மக்களுக்குரியது அதுதான் ஒற்றை ஆட்சி என்றனர். அதுவும் இன அடிப்படையிலான, மத அடிப்படையிலான பாசிசம்.

இவர்களை பின்பற்றிதான் மோடியின் ஆட்சியும் பாசிசம் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி பன்மைத்துவத்திற்கு இடமில்லை. பாகுபாடுகள் நீடிக்கும் அது இறைவன் கட்டளை. பிறப்பின் அடிப்படையில், பாலினடிப்படையில் உள்ள பாகுபாடுகள் நீடிக்கும் என்பவர்கள்தான் இவர்கள். இதை கட்டிக்காப்பது தான் சனாதனம்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிதான் அடிப்படை கொள்கை. பாட்டளி வர்க்கத்தின் விடுதலைதான், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம்தான் அடிப்படை கொள்கை. இது நமக்கு கருத்தியல் முரண் இல்லை, கருத்து முரண்தான்.

மார்க்சிய இயக்கங்களும், தேர்தலில் ஈடுபடும் கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் ஈடுபடாத கட்சிகளாக இருந்தாலும் நமது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, நமது உடனடி பகை, நிறைய முரண் இருக்கலாம், நிறைய பகை இருக்கலாம். அடிப்படை முரணாகவும், பிரதான முரணாகவும் சனாதனமே இருக்கிறது என்பதை கூறினார். பாசிச எதிர்ப்பில் உங்களோடு கைக்கோர்த்து நிற்போம் என்ற உறுதியை தந்து விடைப்பெறுவதாக கூறினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க