ன்று நாடுமுழுவதும் தனது இந்துராஷ்டிர கனவு இந்தியாவிற்காக காவி – கார்ப்பரேட் பாசிசத்தை, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக மூலம் அரங்கேற்றிவரும் பார்ப்பன பாசிச இந்துமதவெறி பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ், சுதந்திரம் பெற்றுவிட்டதாக கூறப்படும் 1947-க்கு பிறகான இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இந்த தடையை பல ஆண்டுகளாக நீக்கியிருந்தாலும், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர அனுமதிக்கப்படவில்லை.

***

காந்தியின் படுகொலைக்குப் பிறகான தடை

காந்தி, பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்ட பிறகு, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. “நாட்டில் வேலை செய்யும் வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளை வேரறுக்க” இந்தத் தடை விதிக்கப்படுவதாக ஒரு அறிக்கையில் அரசாங்கம் கூறியது.

“நாட்டின் பல பகுதிகளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் தீ வைப்பு, கொள்ளை, கொலை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


படிக்க : வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!


“ஆர்.எஸ்.எஸ் பல்வேறு வன்முறை சம்பவங்களை ஈடுபட்டுள்ளது. அதில் மிகவும் உட்டபட்ச வன்முறை காந்தியை கொன்றதுதான். இந்தச் சூழ்நிலையில், வன்முறையில் மீண்டும் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவதை தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கான முதல் படியாக, சங்கத்தை சட்டவிரோத சங்கமாக அறிவிக்க முடிவு செய்துள்ளனர்” என்றது அறிக்கை.

ஒரு வருடத்திற்குப் பிறகு, ஜூலை 11, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை மீண்டும் நீக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர தடை

1966 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்தது. இந்த உத்தரவு 1970 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் விதிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில், பி.எம்.ஓ.வின் அப்போதைய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசின் “பழைய உத்தரவை மதிப்பாய்வு செய்வோம்” என்று கூறினார்.

எமர்ஜென்சி(அவசரநிலை) காலத்தில் தடை

1975 ஆம் ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியன்று பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்திய பிறகு, ஜூலை 4 அன்று ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 1977 ஆம் ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதியன்று அவசரநிலை முடிவடைந்தபோது ஆர்.எஸ்.எஸ் மீதான தடை மீண்டும் நீக்கப்பட்டது.


படிக்க : நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1


பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகான தடை

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி இந்துமதவெறி பயங்கரவாதிகளால், காசியாபாத்-ல் (இந்துமதவெறியார்களால் திட்டமிட்டு அயோத்தி என்று மாற்றப்பட்ட இடம்) இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 10 அன்று இந்துமதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. பின் சில மாதங்களுக்குள் நீதிபதி பஹ்ரி கமிஷனால் 1993 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை மீண்டும் நீக்கப்பட்டது.

***

பார்ப்பன பாசிச இந்துமதவெறி பயங்கரவாத அமைப்பு, 2014 மோடி ஆட்சி அமைத்ததில் இருந்து இன்று வரை நாடுமுழுவதும் ஊடுருவி பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பை நான்காவது முறையாக நிரந்தரமாக தடை செய்யவும், நாட்டைவிட்டே விரட்டியடிக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும்.


காளி
செய்தி ஆதாரம் : indianexpress

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க