ர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வடஇந்தியாவிற்கு வெளியே, குறிப்பாக கேரளா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அந்த நிலை படிப்படியாக மாறிவருகிறது.

***

கடந்த செப்டம்பர் 21-23 முதல், ஆர்.எஸ்.எஸ்.ன் சிந்தனைக் குழுக்களின் துணை அமைப்பான பிரஜ்னா பர்வா, அஸ்ஸாமில் மூன்று நாள் சிம்போசியம் – ‘லோக்மந்தன்’ ஏற்பாடு செய்தது. இந்திய துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், அசாம் கவர்னர் ஜெகதீஷ் முகி, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செப்டம்பர் 24 முதல் இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றிருந்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரிபுரா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘மாநில விருந்தினராக’ அகர்தலாவுக்குச் சென்றார்.

இந்தியாவின் வடகிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்கள், இந்தியாவின் ‘அரசியல் ஆய்வுக்கூடமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆர்எஸ்எஸ்.ன் மாற்று உத்தியின் மற்றொரு முன்மாதிரியாகச் செயல்படுகின்றன.


படிக்க : பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!


வடகிழக்கு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்

வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆரம்பகால தூண்கள் தாதாராவ் பர்மார்த், வசந்த்ராவ் ஓக் மற்றும் கிருஷ்ணா பரஞ்ச்பே. அக்டோபர் 27, 1946இல், அவர்கள் பிரிக்கப்படாத அஸ்ஸாமிற்கு வந்து அங்கிருந்து குவஹாத்தி, திப்ருகார் மற்றும் ஷில்லாங்கில் முதல் ஷாகாக்களை நிறுவினர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மக்கள் தொகை 34 சதவிதம் முஸ்லிம்கள், மற்ற ஐந்து வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவர்கள். வடகிழக்கில் இந்துக்கள் இல்லாதது, இந்து தேசியவாத சித்தாந்தம் பரவுவதற்கு ஆரம்பக் காலங்களில் தடையாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் தனது பல்வேறு திட்டங்களின் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்களை வென்றெடுக்க முயற்சித்து வருகிறது. ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் ஆசிரமம், ராஷ்ட்ர சேவிகா சமிதி, வித்யா பாரதி மற்றும் விவேகானந்த கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம் வடகிழக்கு இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் தீவிரமாக செயல்படுகின்றனர்.

மாநில அரசின் உயர்தர கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அதனை ஆர்.எஸ்.எஸ் தனது இலக்கை அடைய பயன்படுத்திக் கொள்கிறது. முன்னதாக, இப்பகுதியில் உயர்தர தனியார் கல்வி கத்தோலிக்க பள்ளிகள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகள் வரலாற்று ரீதியாக பழங்குடி சமூகங்களில் பல்வேறு சேவைகளை புரிந்துள்ளது.

மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில், கிறிஸ்தவர்கள் 70 சதவிதத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். வடகிழக்குக்கு வெளியே டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற கல்வி மையங்களில் கூட, வடகிழக்கு மாணவர்களுக்காக திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்துகிறது. இடதுசாரிகளின் நீண்டகால ஆட்சியை கொண்ட திரிபுரா போன்ற மாநிலங்களில், பாஜக ஆதரவைப் பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், முதல் தலைமுறை வாக்காளர்களை, பாஜகவை ஆதரிக்கச் செய்வதே ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கம். ஆர்.எஸ்.எஸ் பொதுவாக செல்வாக்கு மிக்க அறிவுஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இணைய விரும்பும் இளைஞர்களை ஈர்த்துக்கொள்கிறது.

பழங்குடி சமூகங்களுக்கிடையேயான உள் சண்டைகள், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ் ஊடுவர வாய்ப்பை அமைத்து தருகிறது. வடகிழக்கில் உள்ள பெரும்பான்மையான பழங்குடியின சமூகங்கள் தற்போது உள் சண்டைகளின் மோதிக்கொண்டிருக்கின்றன. மேலும் ஆர்எஸ்எஸ் அவர்களின் கோரிக்கைகளை சங்கத்தின் இலக்குகளுடன் இணைக்க முற்படுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் இப்பகுதியின் இளைஞர்களை செல்வாக்கு செலுத்துவதில் நரேந்திர மோடியின் பிரபலத்தால் பயனடைந்துள்ளன.

வடகிழக்கில், பாஜக ஒரு இந்து மேலாதிக்கக் கட்சி என்ற கருத்தையும் அகற்றியுள்ளது. பழங்குடி மற்றும் கிறிஸ்தவ பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வடகிழக்கில் இந்துத்துவா நற்சான்றிதழ்கள் புறக்கணிக்கப்படுவதால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் எதிர்ப்பாளர்கள் அக்கட்சிக்கு ‘பாரதிய இயேசு கட்சி’ என்றும் பெயரிட்டுள்ளனர்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பை 1942 ஆம் ஆண்டு கேரளாவில் முதன்முதலில் பதிவுசெய்தது. இருப்பினும் அதன் செயல்பாடுகள் முக்கியமாக பல ஆண்டுகளாக மலபார் பகுதியில் மட்டுமே இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளை கோழிக்கோடு மீனவ சமூகங்கள் மூலம் தொடங்கியது. தாழ்த்தப்பட்ட சாதி படிநிலை காரணமாக, இந்த சமூகங்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் அவர்களை வரவேற்றன.

திருவனந்தபுரத்தில் முதன்முதலில் பணியமர்த்தப்பட்டவர்கள் இளம் மாணவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள் அல்ல. மறுபுறம், மலபாரில் உள்ளூர் மக்களிடையே ஊடுருவியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.

அவசரநிலை, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுதியான காலூன்ற அனுமதித்த மற்றொரு காரணியாகும். இந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஏமாற்றமடைந்த இளம் மார்க்சிஸ்டுகளை ஈர்ப்பதற்காக, ‘மார்க்சிசத்திலிருந்து மனிதநேயம் வரை’ என்ற நன்கு அறியப்பட்ட கவர்ச்சி முழக்கத்தை பயன்படுத்தியது.

கேரளாவில் பன்முக கலாச்சாரங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. தபஸ்யா, பாரதிய விசார் கேந்திரா மற்றும் பாரதிய வித்யா நிகேதன் போன்ற நிறுவனங்கள் மூலம் கலாச்சார மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தனது ஆதரவை விரிவுபடுத்தியது.

மாநிலத்தில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாவிட்டாலும், 2019 லோக்சபா தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 2014இல் 10.85% இருந்து 15.2% ஆக உயர்ந்தது. கூடுதலாக, அதன் இந்து தேசியவாதத்தின் மூலம் சில இந்துக்களையும் ஈர்க்க முடிந்தது. மாநிலத்தின் சாதி மற்றும் மத உணர்வுகளில் இந்துக்களைத் தூண்டிவிடுவதில் இந்த அமைப்பு வெற்றி பெற்றது.

2017 ஆம் ஆண்டளவில், ஒவ்வொரு நாளும் சுமார் 5,000 ஷாகாக்கள் நடைபெறும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ், தன்னுடன் இணைந்த அரசியல் அமைப்புகள் அப்பகுதியில் நிலைநிறுத்தத் தவறிய போதிலும், இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் வெற்றி பெற்றுள்ளது.


படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!


ஆகஸ்ட், 2018இல் கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கியது. 300-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை அமைப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அமைப்பில் 1.20 லட்சம் பேரை இணைந்து பணியாற்றினர்.

சபரிமலை விவகாரம் போன்ற அரசியல்-மதப் பிரச்சினைகளில் மோதல்கள் மூலம், கேரளாவின் ஆளும் சிபிஐ(எம்) அரசின் மீதான எதிர்கருத்தை விதைத்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கும் கம்யூனிஸ்ட் மாணவர் சங்கங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு யதார்த்தமானதாகவும், இலக்கை நோக்கியதாகவும் இருக்கிறது, எவ்வளவு சீக்கிரம் முன்னேறி வருகிறது என்ற கேடுகெட்ட அரசியலைப் பார்க்கும்போது, ​​அதை ‘மக்கியாவெல்லியன்’ என்று வர்ணிப்பது மிகையாகாது.

***

உழைக்கும் மக்களிடையே இந்து தேசியவாத சித்தாந்தத்தின் மூலம் ஊடுருவிவரும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சங் பரிவார கும்பல்களை உழைக்கும் மக்களிடையே படையை கட்டி வீத்துவது மட்டுமே நம் ஒரே பணியாகும்.


சந்துரு
செய்தி ஆதாரம்: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க