எடப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன், அன்றைய டி.ஜி.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து தூத்துக்குடியில் நடத்திய அரசு பயங்கரவாதப் படுகொலை. யாருக்காக இந்த படுகொலை வேதாந்தா நிறுவனத்திற்காக. இப்படி குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்படவில்லை.
யார்யாரெல்லாம் இந்த பச்சை படுகொலையை ஆதரித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி கோமாளி என்று நினைத்தோம், ஆனால் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பாசிஸ்ட் தன்மையில் கருத்து சொன்னார். பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன் 13 பேரை சுட்டுக்கொல்லாவிட்டால் 100 பேருக்கு மேல் இறந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மீது என்ன நடவடிக்கை?
படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
தூத்துக்குடி மக்கள் குற்றம் செய்தார்கள்; போலீசு தற்காப்பிற்காக சுட்டார்கள் என்று சி.பி.ஐ அறிக்கை சொல்கிறது. போலீசுதான் குற்றவாளிகள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. இவற்றில் எது வெல்லும்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் அரச பயங்கரவாத படுகொலைகள் பற்றியும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!