தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பா என்றால் இல்லை. அவர்கள் நம் பண்பாட்டுக்கு எதிர் பண்பாடு தான் அவர்களுடைய பண்பாடு. நான்கு வர்ண கோட்பாட்டையும்,சனதான தர்மத்தையும் ஆதரிக்கிற ஒரு அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்.

மிழக போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மூன்று இடங்களில் பேரணி, இருப்பத்து மூன்று  இடத்தில் ஹால் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற இடங்களில் நடத்த முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்..

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது ஊரறிந்த உண்மை. ஜனநாயக நாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிற உரிமையை ஏன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கோ கொடுக்கலாமே என்றால் கொடுத்து விடுவார்களா?

எப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கின்றது என்று தமிழக அரசு ஒரு ஆவணப்படத்தை தயார் செய்து அந்த அமைப்பை தடைச் செய்வதுதான் முதல் தேவை.

அரசு அனுமதி கொடுக்கவில்லையென்றாலும் அவர்கள் ஷாகா போன்ற பயிற்சிகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.பொது வெளியில் சரியான அமைப்புபோல தோற்றத்தை ஏற்படுத்துவது தமிழகத்துக்கு ஒர் எச்சரிக்கை.

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பா என்றால் இல்லை. நம் பண்பாட்டுக்கு எதிர் பண்பாடு தான் அவர்களுடைய பண்பாடு. நான்கு வர்ண கோட்பாட்டையும், சனதான தர்மத்தையும் ஆதரிக்கிற ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

மக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்கி பயங்கரவாத சதி செயல்களை செய்து, கலவரங்களை உருவாக்கி திமுகவை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய திட்டம்.

தமிழ்நாட்டில் திருமாவளவன் வைத்த  தடை முழக்கம் முக்கிய பங்கு வகித்தது. ஆர்.எஸ்.எஸ் எதிராக இந்த பேரணியை அறிவிக்கமால் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க