கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ

ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.

ங்கு இருக்கக்கூடிய நிர்வாகத் துறையை – அரசுத் துறையாக இருக்கட்டும், போலீசுத் துறையாக இருக்கட்டும், நீதிமன்றமாக இருக்கட்டும் – ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள். என்.ஐ.ஏ என்பதே மத்திய அரசின் கைப்பாவையாகத் தான் செயல்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதன் மூலம் பெட்ரோல் விலை அதிகரிப்பு, சிலிண்டர் விலை அதிகரிப்பு பற்றி மக்களுக்கு சொல்லப்போகிறார்களா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எப்பொழுதும் மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது.

ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளனர். கலவரத்தை தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்!

2000 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளை பேசிக்கொண்டிருக்கும் மாநிலம் தான் தமிழ்நாடு. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை   என்ன? இவர்களுடைய கொள்கை சிறுபான்மையினர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், உழைக்கும்  மக்களுக்கும்,  கம்யூனிஸ்டுகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் எதிரானது.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர திட்டத்தை முறியடிக்க ஜனநாயக சக்திகள் முன்னின்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்க வேண்டி இருக்கிறது என்பதை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் பதிவு செய்துள்ளார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க