அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

சிறுபான்மையினர்,  பெண்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா - கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு !
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி,  அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் !
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் !

திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கரை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் நின்று அவர்களை ஓடஓட விரட்டியடித்து இருக்கிறது தமிழ்நாடு. 2009-ல் ஈழத்தமிழர்களுக்கு எதிராக வன்மத்தைக்கக்கிய சுப்பிரமணியசாமியை முட்டையால் அடித்து ஓடவிட்ட தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள்தான் இப்போதும் களத்தில் அர்ஜுன் சம்பத்தை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார்கள்.

அம்பேத்கரின் சிலைக்கு காவி அணிவிக்க மாட்டேன் என்று உயர்நீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்துவிட்டு அதற்கு மாறாக, கும்பகோணத்தில் அம்பேத்கர் காவியும் பட்டையுடன் இருப்பது போன்ற சுவரொட்டியை ஒட்டியிருக்கிறார் அர்ஜூன் சம்பத். அப்படிப்பட்ட அயோக்கியனைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மற்ற அமைப்பினரும்  அம்பேத்கர் மணிமண்டபத்தினுள் நுழையவிடாமல் தடுத்தனர்.


படிக்க : அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!


அம்பேத்கரை இழிவுபடுத்துவதை எதிர்த்த அனைவரையும் கடுமையாகத்தாக்கி கைது செய்த போலீசு, பலநூறு போலீசை கொண்டுவந்து பத்திரமாக அர்ஜூன் சம்பத் அம்பேத்கரை இழிவுபடுத்த உதவி புரிந்திருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதல்ல பிரச்சினை, எதிரிக்கு எதிராக, இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக களத்தில் நின்றோமா என்பதுதான் முக்கியம்.

ஓரண்டுக்கு முன்னர் வி.சி.க.வின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து மனுநூலில் உள்ளதை விளக்கியதை திரித்து, “திருமாவளவன் பெண்களை தவறாகப்பேசுகிறார்” என்றார்கள். பிறப்பின் அடிப்படையில் யாரும் உயர்வு தாழ்வு இல்லை என்றுரைத்த திருவள்ளுவருக்கு, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதியையும் வர்ணத்தையும் காப்பாற்றும் இந்துமத வெறியர்கள் காவி உடையை அணிவித்து அவரை இந்து சாமியாராக்க முயன்றனர். மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப்பேசிய ஆ.ராசாவை குறிவைத்தார்கள். மேற்கண்ட அத்தனைப் பிரச்சினையிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளை புறந்தள்ளியதுடன் காறி உமிழ்ந்தது. பார்ப்பனியத்தை எதிர்த்தவர்களுடன் இணைந்து நின்றது தமிழ்நாடு.

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இல்லாத ஆளுநர் அம்பேத்கரை சீர்திருத்தவாதி என்று கூறிக் கொண்டே இழிவுபடுத்துகிறார். அர்ஜுன் சம்பத்தும் ஜெய்பீம் என்று கூறிக் கொண்டே அம்பேத்கருக்கு காவி உடை போடுகிறார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வைச் சேர்ந்த பலரும் அம்பேத்கர் இந்துமதத்தலைவர் என்கிறார்கள். காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடியான வேத, பார்ப்பன எதிர்ப்பு என்பதை திட்டமிட்டு நீக்கம் செய்கிறார்கள்.

 

தமிழ்நாட்டிலிருந்து 2000-க்கும் மேற்பட்டவர்களை மக்களின் வரிப்பணத்தில் காசிக்கு அழைத்துச் சென்று காவிச் சாயம் பூசுகிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய திருக்குறளுக்கு, நானே நான்கு வர்ணத்தையும் உருவாக்கினேன் என்று கூறிய கீதையின் சாயத்தை பூசுகிறார்கள். தமிழுக்கு நாங்கள் தொண்டாற்றுகிறோம் என்ற பெயரில் தமிழினத்தையும் தமிழ் பண்பாட்டையும் அழிக்க, வாளேந்திய காலம் முடிந்து போனதால் தற்போது நூல்” ஏந்தி வருகிறார்கள்.

நாம் அமைதியாக இருந்தோம் என்றால், அம்பேத்கர் நூலுக்கும் பார்ப்பன பொழிப்புரை எழுதுவார்கள். நான் கொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது மனுஸ்மிருதியை எழுதிய மனுவாகத்தான் இருக்க முடியும் என்ற அம்பேத்கரின் கருத்துக்களைக்கூட மனுஸ்மிருதியின் கருத்துக்களாக திரிப்பார்கள்.

திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து இழிவுபடுத்தப்படும் பாசிச போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் நின்று விரட்டியடிக்க வேண்டும். அதைத்தான் தமிழ்நாடு செய்திருக்கிறது, இனியும் செய்ய வேண்டும். நம்முடைய எதிர்ப்பு வேத – சனாதன – பார்ப்பனிய, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்புடன் நின்று விடுவதாக இருக்கக் கூடாது.


படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !


அம்பானி – அதானி பாசிச கும்பலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலும் இணைந்து மறுகாலனியாக்க கொள்கைகளுக்காக நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர்,  பெண்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா – கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து அவர்களை களத்தில் சந்திக்க வேண்டும். அதுவே நம்முடைய தலையாய கடமையாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு – 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க