இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் “தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்” என்பது புத்தக-ஏட்டில் மட்டுமே உள்ளது.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தன.
பாராட்டிற்குரியதுதான்; ஆனால் அது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அனைவரும் இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்..
சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகியும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய முடியாத நிலைமையே நீடிக்கிறது. இது ஏன்?
இரட்டை குவளை முறை இன்னும் பின்பற்றப்படுவது ஏன்?
ஆதிக்க சாதி வெறியர்கள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது ஏன்?
‘இப்பெல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க’ என்பவர்களுக்காக தான் இந்த பதிவு!
இவ்வாறு சென்னை பு.மா.இ.மு தோழர் யுவராஜ் அவர்கள் சாதி-தீண்டாமையின் இருப்பை கேள்வி எழுப்பியுள்ளார்..
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!