ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு 22 முறை இணைய முடக்கம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 24 முறை இணைய முடக்கம், அதாவது நாட்டிலேயே அதிக இணைய முடக்கத்தை செய்து அம்மாநிலத்தை தனது பாசிச ஆக்டோபஸ் கரத்தால் இறுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.

0

ம்மு மற்றும் காஷ்மீர் கடந்த ஆண்டு 24 முறை இணைய முடக்கத்தை பதிவு செய்துள்ளது – இது உலகின் ஒரு பிராந்தியத்தில் மிக அதிகமாக உள்ளது – என்று மெய்நிகர் தனியார் நெட்வொர்க் வழங்குநரான சர்ப்ஷார்க்கின் ஆய்வு ஜனவரி 17 அன்று கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டில், இந்திய அதிகாரிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 24 முறை இணையத்தை தணிக்கை செய்ததாகவும், நாட்டின் பிற பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் 10 முறை மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் இணைய முடக்கம் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. இப்பாசிச அரசின் அதிகாரிகள் இதனை பெரும்பாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று நியாயப்படுத்துகிறார்கள்.


படிக்க : காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை: பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மோடி-அமித்ஷா கும்பல் !


எனினும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டுவது, அன்புக்குரியவர்களைத் தொடர்புகொள்வது, செய்தித் தளங்களை அணுகுவது மற்றும் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை வெளி உலகிற்குப் பரப்புவது ஆகியவற்றை கடினமானதாகவோ அல்லது சாத்தியமற்றதாக மாற்றுவதற்கு, குறிப்பாக மக்களை ஒடுக்குவதற்கு அரசுகளால் இந்த இணையக் கட்டுப்பாடுகள் -முடக்கங்கள்- செயல்படுத்தப்படுகின்றன. “இந்த முடக்கங்களில் பல உள்ளூர் அல்லது தேசிய அளவில் முழு இணைய முடக்கங்களை உள்ளடக்கியது” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஜனவரி 17 அன்று, சர்ப்ஷார்க் கூறுகையில், “ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்த பின்னர், 2019 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீர் குடியிருப்பாளர்கள் முன்னறிவிப்பு இல்லாத இணைய முடக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 2019 முதல் ஜனவரி 2020 வரை அம்மாநில மக்கள் முழுமையான இணைய முடக்கத்தினால் பாதிப்புக்குள்ளானார்கள். அதன் பிறகு 2G இணையம் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகே 4G சேவைகளை அதிகாரிகள் அனுமதித்துள்ளார்கள்.

2022 ஆம் ஆண்டில், அதிக இணைய முடக்கம் செய்வதில் ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை விட இந்தியா முன்னிலையில் இருந்தது என்று சர்ப்ஷார்க் குறிப்பிட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரில், இணைய கட்டுப்பாடுகளுக்கான அனைத்து வழக்குகளும் அரசியல் கொந்தளிப்புடன் தொடர்புடையவை என்று நெதர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில், கடந்த ஆண்டு 32 நாடுகளில் இணையம் நிறுத்தப்பட்டது, மொத்தம் 112 இணைய துண்டிப்புகள் பதிவாகியுள்ளது. சுமார் 4.2 பில்லியன் மக்கள் இந்த இணைய முடக்கத்தால் பாதிப்புக்குள்ளானதாகவும், ஆசிய நாடுகளில் இந்த வழக்குகளில் கிட்டத்தட்ட பாதி (47%) இருப்பதாகவும் சர்ப்ஷார்க் கூறினார்.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


சர்ப்ஷார்க்கின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் ராசைட்டி-க்ராசாஸ்கே (Gabriele Racaityte-Krasauske), கடந்த ஆண்டு உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணையத் தடைகளை எதிர்கொண்டதாகக் கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை அரங்கேற்றி வரும் ஒன்றிய பாஜக அரசு குறிப்பாக பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மாபெரும் ஒடுக்குமுறையை ஏவியது. அன்று முதல் இதுநாள் வரை அங்கு நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் இராணுவத்தின் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு காட்டாத மற்றும் பரப்பாத வண்ணம் இணைய முடக்கத்தை அரங்கேற்றி உழைக்கும் மக்கள் மீதான கருத்துரிமைக்கு எதிராக தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 24 முறை இணைய முடக்கம், அதாவது நாட்டிலேயே அதிக இணைய முடக்கத்தை செய்து அம்மாநிலத்தை தனது பாசிச ஆக்டோபஸ் கரத்தால் இறுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க