02.03.2023

அதானியின் பங்கு விலை  குறைந்தால்
சமையல் எரிவாயு விலை உயரும்!

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை 50 ரூபாயும் வணிக உபயோகத்திற்கான எரிவாயு உருளை 351 ரூபாயும் மோடி அரசால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் 1068 ரூபாயில் இருந்து  1118.50 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

மூன்று மாநிலத் தேர்தல் பிரச்சாரம் முடிந்து  முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பே நேற்றைய தினம் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77.69 டாலர்.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112.40 டாலர்.  2022 -ம் ஆண்டு மார்ச் மாதம்  சமையல் எரிவாயு உருளையின் விலை 965.00 ரூபாய்.

கடந்த ஆண்டு ஒப்பிடும்போது  கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 35 டாலர் குறைந்திருக்கிறது. ஆனாலும்  சமையல்  எரிவாயு உருளை விலை   கடந்த ஓராண்டில் அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் திரும்பப் பெற வேண்டும் என்று  ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.


படிக்க: அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்


கேட்டால் கொடுப்பதல்ல ;மோடி – அமித்ஷா ,ஆர்எஸ்எஸ் பாசிச கும்பலின் ஆட்சி.இந்த பாசிச கும்பலுக்கு  எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டி அமைப்பதே தற்போதைய உடனடித் தேவை.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி  – மோடியின் கூட்டுக் களவாணி செயல்கள் நாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் இந்த நாட்டின் மக்களின் மீது இந்த விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.

அதானின் பங்குகளை கடும் சரிவை சந்தித்து இருக்கிறது . அதானியின்  பங்குகள் முழ்குவதை தவிர்க்க மக்களை கிணற்றில் தள்ளி இருக்கிறது மோடி அரசு.     ஆர்எஸ்எஸ் -பாஜக ;அம்பானி- அதானி பாசிச கும்பல் நாட்டை சூறையாடி கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி விடக் கூடாது என்பதற்காகத்தான் பாஜக, ஆர். எஸ். எஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு பிரிவினைவாத பேச்சுக்களைப் பேசி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களை அதானி அம்பானி பாசிச கும்பலுக்கு விற்கும் போதும் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு விலை உயர்வின் போதும் அதை  ஆதரித்துப் பேசி வரும் அண்ணாமலையும் அமைதியாய் இருக்கும் பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மக்களின் எதிரிகளே என்பதை மக்கள் உணர்ந்து அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க