மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் கிளையின் பொருளாளர் தோழர் மோகன் அவர்களின் தந்தையும் முன்னாள் ம.க.இ.க உறுப்பினரும், மக்கள் அதிகாரத்தின் ஆதரவாளருமான தோழர். க. வெங்கடேசன் அவர்களின் இறுதி ஊர்வலம் 17.04.2023 அன்று மாலை 3 மணியளவில் மேலப்புலம் புதூர் கிராமத்தில் நடைபெற்றது. நினைவேந்தல் கூட்டத்தை தோழர் எஸ்.சரவணன், மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம், தலைமை ஏற்று நடத்தினார். தோழமை அமைப்பான புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னனி (மாநில ஒருங்கிணைப்புக்குழு), திராவிடர் விடுதலைக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகள், ஊரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் தோழர் வெங்கடேசன் அவர்களின் 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை பற்றியும் அவர் மற்ற தோழர்களுடன் பழகிய விதம், பேசிய கருத்துக்கள் பற்றியும் பேசினர்.
அவர், தான் ஏற்றுக் கொண்ட வேலைக்கு இறுதி வரை உண்மையாகவும் ஒத்துழைப்பு அளித்தும் வந்தார். மேலும், கடந்த கொரோனா 2019-20 காலகட்டத்தில் டாஸ்மாக்-ஐ திறக்க கூடாது என்று சொல்லி ஓச்சேரி பகுதியில் தோழர் மோகன் மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகிய இருவரும் பெயர் பதாகை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்காக ஒரு வாரகாலம் அரக்கோணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள். 82 வது வயதிலும் உறுதியுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றது என்பது அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்ததைக் காட்டுகிறது.
மேலும், அவர் படிப்பதில் மிகவும் ஆர்வம் வாய்ந்தவர். அதைப் புரிந்து கொண்டு மற்ற தோழர்களுக்கு விளக்குவதிலும் மாற்றுப் புத்தகங்கள் இருந்தால் மற்ற தோழர்களிடம் கேட்டுப் பெற்று அதை படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டியவர். அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை நம்முடன் விட்டு சென்றிருக்கிறார். அதை வரித்துக்கொண்டு நாம் சமூக மாற்றத்தை உருவாக்க பாடுபடுவோம்.
அவர் விட்டுச் சென்ற பணியை தீர்க்கமாக செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியுடன் தோழருக்கு சிவபஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க உடல் தானம் செய்யப்பட்டது. தோழர் திலகவதி, மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம், அவர்களின் முழக்கங்களுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
வாழ்நாள் போராளி, மூத்த தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு எங்கள் சிவப்பு அஞ்சலி.