தோழர் லெனினின் 153−வது பிறந்த நாள் விழா!

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 153−வது பிறந்த நாள் விழா ம.க.இ.க, பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது.

ப்ரல் – 22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 153−வது பிறந்த நாள் விழா ம.க.இ.க, பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது. தோழர் லெனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தும், கூட்டங்களை நடத்தியும், பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மக்கள் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி:

  • மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்!
  • பாட்டாளி வர்க்கமாக அணிதிரள்வோம்!

என்கிற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழுவின் கிளை / இணைப்பு சங்கங்கள் சார்பாக லெனின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இனிப்பு வழங்கி  கொண்டாடப்பட்டன.

# SRF மணலி கிளையின் சார்பாக ஆலைப்பகுதியிலும்,

# Ti மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நெமிலிச்சேரி ஆலை வாயிலிலும்,

# ஆக்சில்ஸ் இந்தியா கிளை, செய்யாறு ஆலைப்பகுதியிலும்,

# பு.ஜ.தொ.மு மாவட்ட குழு சார்பாக பட்டாபிராம் பகுதியிலும் தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தொழிலாளர்கள் கணிசமாக கலந்து கொண்டு மார்க்சிய- லெனினிய- மாவோ சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் முழக்கமிட்டனர்.

ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்றது. கிளைச் சங்கத் தலைவர் தோழர் தாமரைச் செல்வி தலைமை தாங்கினார். கிளைச் சங்கத் செயலாளர் தோழர் முத்துக்குமார் கொடி ஏற்றினார். மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார். தோழர் சம்பத் நன்றி கூறினார். இறுதியில் இனிப்பு வழங்கப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகம்:

உலக மேலாதிக்கத்திற்கான மேல்நிலை வல்லரசுகளின் ஆக்கிரமிப்புப் போர்களையும் உலகப் போருக்கான சதிகளையும் முறியடிப்போம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுவோம்!

மார்க்சிய – லெனினிய-மாசேதுங் சிந்தனையை உயர்த்திப்பிடிப்போம்!

என்கிற முழக்கத்தின் அடிப்படையில் லெனின் பிறந்த நாள் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டு  கூட்டம் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

மக்கள் அதிகாரம்:

கடலூர்:
கடலூர் மக்கள் அதிகாரம் சார்பாக, புரட்சியாளர் மாமேதை லெனின் பிறந்த நாள் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி:
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் பிறந்தநாளில் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லை, தூத்துக்குடியில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டன.

 

தகவல்:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(இணைப்பு: மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க