சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி :அம்பானி -அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை! விழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டு விளக்க தெருமுனைக்கூட்டம் மதுரை திருமங்கலம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்றது. இதில், ஜனநாயக சக்திகளும் மாற்றுக்கட்சி தோழர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மக்கள் அதிகாரம் மாநில இனைச்செயலாளர் தோழர் குருசாமி, மதுரை மண்டல பொருளாளர் தோழர் சிவகாமு, தோழர் பரமன், தோழர் நாகராஜ், தோழர் வீரன், எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானம், வி.சி.க.வின் விவசாய சங்கம் மாநில பாதுகாப்பு தலைவர் தோழர் தென்னரசு, திருமங்கலம் விசிக ஒன்றிய செயலாளர் தோழர் சுப்பிரமணியன், கோவில் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தோழர் பகத்சிங், பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் நிவேதா ஆகியோ கலந்து கொண்டு பாசிசத்திற்கு எதிராக இந்த மாநாட்டில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணி திரண்டு வேண்டும் என்று உரையற்றினார்கள்.

தகவல்:
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க