138வது மே தினம் || காஞ்சிபுரம், வேலூர் – ஆர்ப்பாட்டங்கள்! || பு.ஜ.தொ.மு ஆலைவாயில் கூட்டங்கள்

காஞ்சிபுரம் - வேலூர் மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு) சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் – வேலூர் மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்சிஸ் இந்தியா கிளைசங்கப் பொருளாளர்தோழர் சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அதிகாரம் இணைச்செயலாளர் தோழர் சரவணன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார். அவர் உரையில், “இன்று அதிகார வர்க்கத்தில் எப்படி எல்லாம் பாசிச சக்திகள் ஊருடுவி உள்ளது என்பதை பற்றியும், இந்த அரசமைப்பை பாதுகாப்போம் என கூறிக் கொண்டு விவசாயம் தொழிலாளி வர்க்கம் இளைஞர்கள் பெண்கள் தலித்துக்கள் சிறுபான்மை மக்கள் மீது இன்று பாசிசத்தை தினம் தினம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றியும், காவி- கார்ப்பரேட் இரண்டும் இணைந்து கொண்டு சட்டத் திருத்தம் என்ற பெயரில் இன்று உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பதை சுட்டி காட்டினார்கள்.

ஆக்சிஸ் இந்தியா கிளை செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் நன்றி உரையாற்றினார். முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

***

வேலூர் மாவட்டம் தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பாக தலைவர் தாமரைச்செல்வி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். செயலாளர் முத்துக்குமார் அவர்கள் கொடியேற்றி தலைமை உரையாற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் சுந்தர் அவர்கள் மே நாள் சூளூரையில் சுற்றி வளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

***

மே தினத்தையொட்டி மக்கள் அதிகாரம் சார்பாக திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் ஆசாத் ஆற்றிய உரை காணொலி வடிவில்

பாருங்கள்! பகிருங்கள்!

தகவல்: மக்கள் அதிகாரம், திருவாரூர்.

***

மே தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு)வின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடைபெற்றது.

ஏ.சி.என். கிளை சங்கம் பட்டரவாக்கம்
காமாஸ் வெக்ட்ரா ஆலை ஓசூர்
பட்டாபிராம் பகுதி கொடியேற்றம்
டி.ஐ. மெட்டல் பார்மிங் ஆலை திருவள்ளர்
TPL. HCD ஆலை சங்கம்
வேலூர் அடுக்கம்பாறை தரைக்கடை வியாபாரிகள் சங்கம்

தகவல்: பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க