இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!

மோடி அரசுக்கு எதிராக செயல்படும் பல்வேறு ஊடகவியளாலர்கள் சிறை, சித்திரவதைக்குள்ளாகிரார்கள். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைந்துவைக்கப்படுகிறார்கள்.

0

லக பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டுல் 161-வது இடத்திற்கு சரிந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விட பல இடங்கள் பின் தங்கியுள்ளது என்று எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்தியாவை விட குறைந்த தரவரிசையில் உள்ள சில நாடுகள் பங்களாதேஷ்(163), துருக்கி(165), சவுதி அரேபியா(170), ஈரான்(177), சீனா(179), வடகொரியா(180). உலக பத்திரிகை சுதந்திர தினமான மே 3-ஆம் தேதியன்று இந்த அட்டைவணை வெளியிடப்பட்டது.

அரசியல் சூழல், சட்ட கட்டமைப்பு, பொருளாதார சூழல், சமூக கலாச்சார சூழல் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் ஒரு நாட்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் படுத்தப்படுள்ளது. இதில், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு பிரிவில் (172) மிகவும் குறைவாகவே இருந்தது.

படிக்க : டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து தரவரிசயில் சரிவை சந்தித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மிகக்குறைந்த நிலைக்கு சென்றுள்ளது. எனினும், கடந்த ஆண்டு(2022) பிப்ரவரியில் ஓர் தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் நாடுகளின் தரவரிசைகளுடன் உடன்படவில்லை என்று பாசிச மோடி அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2023 அறிக்கையோ, “பத்திரிகையாளர்களுக்கு எதிரான அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் குவிப்பு ஆகியவை அனைத்தும் 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) – இந்து தேசியவாத வலதுசாரிகள்- ஆட்சியமைத்தப்பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது” என்று கூறுகிறது.

“முதலில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக, இந்திய பத்திரிகைகள் மிகவும் முற்போக்கானதாகக் கருதப்பட்டன. ஆனால், 2014 மோடி பிரதமரான பிறகு பிரச்சினை தீவிரமாக மாறியது. பெரிய கார்ப்பரேட் குழுமங்கள் ஊடங்களில் ஆதிக்கம் செலுத்த துவங்கின. மோடியின் தனிப்பட்ட நண்பர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் சுமார் 800 மில்லியன் இந்தியர்கள் பின்தொடரும் 70-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை வைத்திருக்கிறது. இதேபோல், 2022-ஆம் ஆண்டு இறுதியில் என்.டி.டிவி சேனலை மோடியின் நெருங்கிய நன்பரான கௌதம் அதானி கையகப்படுத்தினார். இது முக்கிய ஊடகங்களின் பன்முகத்தன்மை ஓர் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையே குறிக்கிறது. மோடி அரசை விமர்சிக்கும் இந்திய ஊடகவியலாளர்கள் அடக்குமுறைகளுக்கும் தாக்குதல்குக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

படிக்க : ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

மோடி அரசுக்கு எதிராக செயல்படும் பல்வேறு ஊடகவியளாலர்கள் சிறை, சித்திரவதைக்குள்ளாகிரார்கள். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைந்துவைக்கப்படுகிறார்கள். கௌரி லங்கேஷ் முதல் சித்திக் கப்பன் வரை மேலும் மேலும் காவிக் குண்டர்படையால் தக்குதல்குக்குள்ளான பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்கள் பெயர்கள் நீண்டுகொண்டே இருக்கிறது.

உழைக்கும் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிகொண்டுவரும் பத்திரிகையாளர்கள் காவி – கார்ப்பரேட் கும்பலை தொடர்ந்து அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை காவிக்கும்பலிடமிருந்து பாசிச மோடி அரசிடமிருந்து பாதுகாக்கவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க