மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?

மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது.

0

ரேந்திர மோடியின் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி கும்பல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால், ஓர் ஆய்வு அவை வெறும் வெற்று கூச்சல் என்று வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

சமூக விஞ்ஞானிகளான சஞ்சய் குமார், சுஹாஸ் பால்ஷிகர் மற்றும் சந்தீப் சாஸ்திரி ஆகியோரைக் கொண்டு, வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் (MEDIA IN India: Access, Practices, Concerns and Effects – CSDS) என்ற தலைப்பிலான ஆய்வு முடிவின் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.  அதன்படி, கடந்த ஆண்டு 2022 நவம்பரில், இந்திய மக்கள் தொகையில் ஐந்தில்-மூன்றில் ஒரு பகுதியினர் பிரதமரின் வானொலி உரையைக் கேட்டதேயில்லை.

“நாடு முழுவதும், தென்னிந்தியர்கள் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்பது மிகவும் குறைவாகவே உள்ளது. பிரதமரின் உரை இந்தி மொழியில் இருப்பது கூட குறைவாக கேட்பதற்கு காரணமாக இருக்கலாம். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் கூட மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை கேட்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

படிக்க : மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !

“அதிக ஊடகக் கருவிகள் (டி.வி, இன்டர்நெட், ஸ்டீரியோ போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்கள் கூட இந்நிகழ்ச்சியை கேட்பதில்லை. கடந்த ஆண்டில் ஐந்தில் இரண்டு சதவிதம் பேர் மன் கி பாத் உரையை கேட்கவில்லை. பத்தில் மூன்று பேர் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே கேட்டிருக்கிறார்கள். பாஜக-வின் ஆதரவாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோடி வானொலி உரையை கேட்பதாகத் தெரியவில்லை” என்று அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின் படி, வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில், 63 சதவிதம் பேர் மன் கி பாத் உரையை கேட்பதில்லை. தென்னிந்தியாவில், 75 சதவிதம் பேர் மன் கி பாத் உரையை கேட்பதில்லை. இந்தி பேசாத மாநிலங்களில் 62 சதவிதம் பேர் கேட்பதில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் -அதாவது பாஜக வலுவாக உள்ள பகுதிகளின் கூட- 54 சதவிதம் பேர் மன் கி பாத் உரையை கேட்பதில்லை.

இருப்பினும் இந்தி நடிகர் அமீர் கான், “மன் கி பாத்’ இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன், இது பிரதமர் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயம்” என்று கூறுகிறார். ஆனால்  “பாஜக-வின் ஆதரவாளர்கள் கூட (51 சதவிதம் பேர்) மன் கி பாத் உரையை கேட்கவில்லை” என்று அறிக்கை கூறுகிறது.

நிலைமை சங்கி கூட்டத்தின் வெற்றுக் கூச்சலுக்கு நேரெதிராக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30 அன்று மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோடை, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க சங்கிக் கூட்டம் ஓர் நிகழ்ச்சியாகவே நாடுமுழுவதும் நடத்த முயற்சித்தது. அதில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஓர் தனியார் பள்ளி நிர்வாகம், இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத மற்றும் பாதியிலேயே எழுந்து சென்ற மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளது. மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.

படிக்க : பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

மோடியின் மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லையென்றாலும் இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் வலுக்கட்டாயமாக பார்க்கசொல்வதும், அபராதம் விதிப்பதும் போன்ற மிகவும் கீழ்த்தரமான செயல்களில் இறங்கி தொடர்ந்து உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகிறது. பாசிஸ்டுகளின் வெற்று கூச்சல்களையும், நிகழ்ச்சிகளையும் நாட்டு மக்களின் அதிகமானவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது. ஆனால் அப்படி அம்பலப்பட்டுபோன பிறகும் மோடியின் வெற்று மன் கி பாத் உரையை கட்டாயமாக கேட்க வேண்டும் -பார்க்க வேண்டும்- என்றும், கேட்காதவர்கள் -பார்க்காதவர்கள்- மீது அபராதம் விதிப்பது போன்ற பாசிச அடக்குமுறைகளை அரங்கேற்றியுள்ளது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பல். எனினும் பாசிஸ்டுகளின் மன் கி பாத் போன்ற வெற்று நிகழ்ச்சிகளை நாட்டு மக்களின் அதிகமானவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க