மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்!
நான்கு பேர் மீது கொலை வெறித்தாக்குதல், 50 இருசக்கர வாகனங்கள் மற்றும் பல வீடுகள் அடித்து நொறுக்கி சூறை! சாதி வெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!
தமிழ்நாடு அரசே!
- தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்கள் அனைவரையும் கைது செய்! கடுமையான தண்டனை வழங்கு!
- சாதி வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீசு துறையினர் மீது நடவடிக்கை எடு!
- தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! அதைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்கு! பாதுகாப்பு வழங்கு!
உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
- ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!
- சாதி – மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் ஆதிக்கச் சாதி – மதவெறியை ஒழித்துக் கட்ட களமிறங்குவோம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :- 97916 53200, 78268 47268