பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு! | பு.மா.இ.மு. கண்டனம்

தற்காலிகம், பகுதி நேரப்பணி என்பதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி,  அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி, புதிய கல்விக் கொள்கை -  கார்ப்பரேட் மயமாக்கம் என பயணித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

0

12.06.2023

பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு!
நிரந்தர ஆசிரியர்களை மட்டுமே பணியில் அமர்த்து!

கண்டன அறிக்கை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே!

ன்று (ஜூன் 12) தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பள்ளிகள் திறப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காரணம், கடுமையான வெயில். ஆனால், அதைவிட மோசமான பாதிப்பை மாணவர்களுக்கு உருவாக்கும் காரணங்களைப் பற்றி அரசு மவுனம் சாதிக்கிறது.

பல ஆயிரக்கணக்கான பள்ளிகளில் நிரந்தரமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை, பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் சரி செய்யப்படாதது போன்றவையே அக்காரணங்கள். புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழ்நிலையில், இது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய, பல ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டித்தும் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

படிக்க : மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகள் வரை அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய வேண்டிய அரசு, இவர்களையெல்லாம் பணி நிரந்தரம் செய்து அரசுப் பள்ளிகளின் நிலையை உயர்த்திருக்க வேண்டும்.

ஆனால் அதையெல்லாம் செய்யாத அரசு, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டுதல் என்ற பெயரில், தற்காலிக ஆசிரியர்களைத் தேவையான அளவு நியமித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கை. இதைத் திராவிட மாடல் என பெருமையடித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

பகுதி நேர – தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யச் சொல்வது என்ற கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைப் பார்த்தாலே தெரியும்.

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 12,382. அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2.53 லட்சம் பேர். ஆனால், 37,579 அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கை 2.27 லட்சம் பேர் தான். இவ்வளவு பின்தங்கிய நிலையில்தான் ஏற்கனவே அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதைச் சரிசெய்ய பகுதி நேர – தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது என்பது முக்கியமானது. அதை இன்று கை கழுவி விட்டுள்ளது திராவிட மாடல் அரசு. இதன் நோக்கம் தற்காலிகம், பகுதி நேரப்பணி என்பதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி,  அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி, புதிய கல்விக் கொள்கை –  கார்ப்பரேட் மயமாக்கம் என பயணித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

படிக்க : திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்

இதை நாம் அனுமதித்தோமானால், மிச்சமிருக்கும் அரசுப் பள்ளிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டிவிட்டு, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கல்வி உரிமையைப் பறித்து விடுவார்கள்.

பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – மாணவர்கள் ஒருங்கிணைந்து, அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க, களத்தில் இறங்கிப் போராடுவதோடு தனியார்மயத்திற்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டும்.

அத்தகைய ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும் ஆதரிக்கவும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி 0எந்த சமரசமும் இன்றி களத்தில் நிற்கும் என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க