சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!

நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச கும்பலின் ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். மூஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி காவிக்குண்டர்களை வெறியூட்டுகிறார்கள்.

0

வெறுப்பு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற சுதர்சன் டி.வி.யின் தலைவர் சுரேஷ் சவாங்கே மீண்டும் ஒரு வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி மூஸ்லீம் மக்கள் மீதான காவிக்குண்டர்களின்  தாக்குதல்களுக்கு சுரேஷ்-வின் வெறுப்பு பேச்சுதான் காரணமாக இருந்துள்ளது என்ற அடிப்படையில் சங்கம்னேர் போலீசு சுரேஷ் மீது மதவெறுப்புணர்வை பரப்புதல், இரண்டு சமூகங்களுக்கிடையே பகையை உண்டாக்குதல் போன்ற வழக்குகளை பதிவு செய்யதுள்ளது.

கடந்த ஜூன் 6 அன்று சவாங்கே நடந்த காவிக் குண்டர்களின் தாக்குதலை பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க விவரிக்கிறார்கள். ஜூன் 6 ஆம் தேதி காலை 9.15 மணியளவில் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னேர் நகரில் உள்ள டில்லி நாகா பகுதியில் உள்ள தனது வாடா பாவ் உணவகத்தில் அசார் பதான் இருந்தார். சுமார் 100-150 பேர் கொண்ட காவிக் குண்டர்படை கடைக்கு முன்பு நின்று கொண்டு “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “யா லாந்த்யா நா மாரா” என்ற கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தது. (லாந்த்யா – இது மாகாராஷ்டிராவில் முஸ்லீம்களை இழிவுபடுத்தும் சொல்). இதனால் 34 வயதான பதான் அச்சமடைந்தார். இக்கும்பல் கடையை மூடச்சொல்லியுள்ளது.

“நான் கடையை மூடிவதற்குள், அந்த கும்பல் என் கடையை சூறையாடத் துவங்கியது. மேசை, நாற்காலிகளை உடைந்து, உணவு பொருட்களை நாசம் செய்தது. கொதிக்கும் எண்ணையை எங்கள் பணியாளர் காலில் கவிழுத்துவிட்டது. நல்வாய்ப்பாக எங்களை தாக்காமல் கடையை சூறையாடி சென்றுவிட்டது அக்கும்பல்.” என்றார் பதான்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!

இந்து சமாஜ் என்ற காவி அமைப்புதான் சங்கமனேரில் பக்வா மோர்ச்சா என்ற ஊர்வலத்தை நடத்தியுள்ளது. கடந்த மே 28 அன்று நடந்த சிறிய போக்குவரத்து பிரச்சினையின் காரணமாகவே இந்த கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல்.

நகரின் சமூக சேவகர் அப்துல் அஜீஸின் கூற்றுபடி, மே 28 அன்று, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒரு சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் உணவகங்கள் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற புகாரை காவிக்கும்பல் எழுப்பியது.

“மே 28 அன்று ஒரு டெம்போ வாகனம் அப்பகுதி வழியாக செல்ல முயன்றது. அது மீண்டும் மீண்டும் ஹான் சத்தத்தை எழுப்பியது. ஒரு கடையின் உரிமையாளர் ஹான் அடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஓட்டுநர் அங்கிருந்து உடனே சென்று விட்டார். மீண்டும் 15 நிமிடங்களுக்கு பிறகு 6-7 பேருடன் ஓட்டுநர் திரும்பிவந்தார். வாக்குவாதம் முற்றியது. உடனே 100-150 பேரை ஓட்டுநர் அழைத்தார். “அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கடை வைத்திருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். போலீசு வந்த பின்னரும் கற்களை வீசினர்.” என்கிறார் அஜீஸ்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஊர்வலம் நடத்த சமாஜ் அமைப்பு திட்டமிட்டது. ஜூன் 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு பக்வா மோர்ச்சா என்ற ஊர்வலம் சங்கம்னேர் நகரில் தொடங்கியது. அக்காவிக்கும்பல் ஆயுதங்களை உயர்த்தி லாந்தியாடியை விரட்டுங்கள் என்று கோஷங்களை எழுப்பியது. அதில் ஒருவன் “எல்லா மசூதிகளையும் அழித்து விடுங்கள்! அப்போதுதான் இந்துக்களின் பலம் வெளிப்படும்” என்று முஸ்லீம் வெறுப்பை கக்கினான். மற்றுறொருவன், “சில நாட்களுக்கு பிறகு, நாங்கள் அவர்களை வீடுகளில் இருந்து வெளியே இழுத்து அடிப்போம்” என்றான்.

இச்சம்பவங்கள் நிகழும்போது போலீசு அங்கேதான் இருந்தது. அவர்களின் முன்னால்தான் தனது கடை சூறையாடப்பட்டதாக பதான் குற்றம் சாட்டினார். “எனக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நான் புகார் கொடுக்க மாலை 5 மணியளவில் போலீசு நிலையம் சென்றேன். ஆனால் எஃப.ஐ.ஆர் பதிவு செய்ய இரவு 10 மணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. நான் ஒரு கடை உரிமையாளர். காயமடைந்த எனது ஊழியர் ஓர் இந்து” என்றார் பதான்.

ஜூன் 6 ஊர்வலத்தின் போது சுதர்சன் டி.வி.யின் தலைமை ஆசிரியர் மற்றும் வெறுப்பு பேச்சு பேசித்திரியும் காவி பயங்கரவாதி சுரேஷ் சவாங்கே, “சங்கம்னர் விரைவில் பாகிஸ்தானாக மாறக்கூடும். முஸ்லீம் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்து ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று வெறுப்பு பேச்சை பேசினார். இதனால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை காவிக் குண்டர் படை வன்முறை வெறியாட்டம் போட்டது.

படிக்க : ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

ஹுசைன் ஃபகிர் முகமது ஷேக் (70), என்பவர் தனது வீட்டிற்கு வெளியே ஒரு கருங்கல் படுத்திருந்தபோது, காவிக் குண்டர்களால் தாக்கப்பட்டார் என்று அவரது மனைவி ரஷிதா (63) கூறினார். “என் கணவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அக்கும்பல் எங்களை லாந்தியர்கள் என்று அழைத்தது. நாங்கள் அமைதியாக இருந்தோம். அக்கும்பல் எங்கள் மீது கற்களை வீசி எறிந்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து எங்களைத் தாக்கியது. என் கணவர் தலையில் மண்வெட்டியால் அடித்தது. என்னை உதைத்து கீழே தள்ளியது.” என்றார்.

ஜூன் 6-ம் தேதி பேரணியை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்த பஜ்ரங் தள தலைவர்கள் விஷால் வக்சௌரே மற்றும் யோகேஷ் சூர்யவன்சி ஆகியோர் மீதும் போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது. “இது எனக்கு எதிரான 1,827 வது எஃப்ஐஆர்,” என்று காவி பயங்கரவாதி சவாங்கே பெருமைபீற்றிக்கொண்டான். இந்துக்களுக்காக குரல் எழுப்பியதற்காக 18,000 முறை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், நான் அதை தொடர்ந்து செய்வேன் என்றான் எந்த காவி பயங்கரவாதி.

நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச கும்பலின் ஆட்சியில் காவிபயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். மூஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி காவிக்குண்டர்களை வெறியூட்டுகிறார்கள். இஸ்லாமிய பகுதிகளில் கலவரங்களை திட்டமிட்டே அரங்கேற்றுகிறார்கள். நாடுமுழுவதும் பரவி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் பாசிச எதிர்ப்பு படையாக ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க