தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம் – தெருமுனைக் கூட்டம் | மக்கள் அதிகாரம் மதுரை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூரை 348/2 இந்திய அளவில் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று ஆட்சி மொழியாக ஆக்கிடு என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

துரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கவும் என்ற தலைப்பில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் இணைந்து நடத்திய தெருமுனைக் கூட்டம் 29.07.2023 காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது

இதில் மக்கள் அதிகாரம் தோழர். குருசாமி மாநில இணைச் செயலாளர் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மதுரை மண்டல பொருளாளர்‌ தோழர். சிவகாமு மற்றும் தோழர். நாகராஜ் சிறப்புரை ஆற்றினார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூரை 348/2 இந்திய அளவில் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று ஆட்சி மொழியாக ஆக்கிடு என்று கோரிக்கை வைக்கப்பட்டது.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்


மேலும் தோழர் குருசாமி பேசுகையில், நாம் வைக்கும் கோரிக்கை யாரிடம் வைக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். நாம் நினைப்பது போல மற்ற கட்சிகளைப் போல் பாஜகவும் ஒரு கட்சி என்று எண்ணக்கூடாது. இந்து – இந்தி – இந்தியா என மொழி மாநில அடையாளங்களை ஒழித்துக் கட்டி ஒரு இந்துஸ்தித்தை அமைக்க வேண்டும் என்ற வெறிபிடித்த மிருகங்களை கொண்ட கட்சியாகும். அதனால் தான் மணிப்பூரை பற்றவைத்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது அந்த பாசிச சக்திகளை முழுவதுமாக ஒழித்து கட்டாமல் நாம் எந்த உரிமையும் பெற முடியாது. அந்த நடவடிக்கையில் நாம் ஒன்றுபடுவோம் என்று பேசினார்.

மேலும் ஜனநாயக சக்திகள் தமிழ் தேச குடியரசு இயக்கம் தோழர் மெய்யப்பன் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். தமிழ் தேச பேரியக்கம் தோழர் தெய்வம்மாள், ஆதித்தமிழர் பேரவை சோனை முத்து, மல்லிகா பு.இ.மு தோழர் குமரன், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் சிவப்பிரகாசம், தந்தை பெரியார் திராவிடக் கழக தோழர். தமிழ் பித்தன், தமிழ் தமிழர் இயக்கம் தோழர் பரிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மருத்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இவண்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க