அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்

சாரதா ஊழல் செய்த ஹிமந்த பிஸ்வா சர்மா, பாசன ஊழல் செய்த அஜித் பவார், வியாபம் ஊழல் செய்த சிவராஜ்சிங் சௌகான் உள்ளிட்ட  ஊழல்வாதிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை உத்தமர்களாக்கியதுதான் பாசிஸ்டுகள் செய்த ஊழல் ஒழிப்பு.

ழல் ஒழிப்பு பேசுகிற காவி கும்பலின் யோக்கியதைக்கு கர்நாடகாவின் 40 சதவீத கமிஷன் ஆட்சியே சாட்சி. ஆனாலும், ஊழல் ஒழிப்பு என்பதை தனது கொள்கை என்று பேசி வருகிறது காவி கும்பல்.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், காவி கும்பல் தனது சித்தாந்த மற்றும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டுவதற்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது என்பது சமீப காலங்களில் அம்பலமாகியிருக்கிறது. குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒழித்துக்கட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கத் துறையைக் கொண்டு ரெய்டு நடத்துகிறது பாசிச மோடி அரசு.

தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, கேரள மாநிலம் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் மோசடியை ஆதாரமாகக் கொண்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான மொய்தீனின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, வருகின்ற சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலையொட்டி சத்தீஸ்கர் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு, டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஜார்க்கண்ட அமைச்சர் ராமேஷ்வர் மற்றும் அவரது மகன் ரோஹத் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு, நிலக்கரி ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்ந்த் சோரன் உதவியாளர் வீட்டில் ரெய்டு, பீகாரில் நில மோசடி வழக்கில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் மகள்கள் வீடுகளில் ரெய்டு என எதிர்க்கட்சிகள் மீதான மோடி அரசின் ரெய்டுகளின் பட்டியல் முடிவின்றி தொடர்கிறது.


படிக்க: சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமான மோடி அரசின் மெகா ஊழல்கள்! | தோழர் அமிர்தா | தோழர் புவன்


இந்த ரெய்டிலோ அல்லது இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு ரெய்டுகளிலோ முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் ஏதும் பறிமுதல் செய்யப்பட்டதாக வரலாறில்லை. மாறாக, இந்த ரெய்டுகளை அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகவே அனைத்துக் கட்சிகளும் கையாண்டன.

அதிலும், மோடி அரசோ, இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்காக எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுகிற நோக்கத்தில்தான் இந்த ரெய்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ரெய்டுகளை ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளாகக் காட்டி படித்த மற்றும் ஊழல் வெறுப்பு கொண்ட குட்டி முதலாளித்துவப் பிரிவினரை தனது இந்துத்துவ அரசியலுக்கு அடியாட்படையாக திரட்டிக் கொள்கின்றது, காவி பாசிச கும்பல்.

சாரதா ஊழல் செய்த ஹிமந்த பிஸ்வா சர்மா, பாசன ஊழல் செய்த அஜித் பவார், வியாபம் ஊழல் செய்த சிவராஜ்சிங் சௌகான் உள்ளிட்ட  ஊழல்வாதிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை உத்தமர்களாக்கியதுதான் பாசிஸ்டுகள் செய்த ஊழல் ஒழிப்பு. காவி கும்பலின் இத்தகைய  ‘ஊழல் ஒழிப்பு’ நடவடிக்கைகளை முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களுமே காரித் துப்புகின்றன.


படிக்க: ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!


ஹிண்டன்பர்க் அறிக்கை, சி.ஏ.ஜி அறிக்கை என பாசிச மோடி அரசுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்தாலும் அவற்றைக் கொண்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதை விடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புரண்டு கொண்டிருக்கின்றன; மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக மோடியை வாய்திறக்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கின்றன; வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

எனவே, மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அரசு தொடுத்துள்ள காவி-கார்ப்பரேட் பயங்கரவாதத் திட்டங்களுக்காகவும் நடவடிக்கைகளுக்காகவும், ஊழல் குற்றங்களுக்காகவும் இந்த கும்பலைத் தடைசெய்வது அவசியமானதாகும். அரசு அதிகாரத்தில் காவி பயங்கரவாத கும்பல் ஊடுருவியிருப்பதால், இக்கும்பலைத் தடைசெய்வதற்காக ஒரு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பது காலத்தின் கட்டாயமாகும்.


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க