கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அரும்பலவாடி கிராமத்தில் செப்டம்பர் 17 அன்று கலவரத்தை ஏற்படுத்துவதற்காக ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி விநாயகர் சிலையை திட்டமிட்டு இரவு நேரத்தில் வைத்தனர். அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு போலீசு சிலையை எடுத்துச்சென்றது.
இது காவிகளை ஆத்திரமூட்டியது. இதனால் இரவு 12 மணியளவில் வி.சி.க கட்சியைச் சேர்ந்த சூசை அவர்களின் வீட்டிற்கு முன்பும் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பிஜேபி, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டது. வி.சி.க தலைவரை கொச்சைப்படுத்தியும் கோஷங்களை எழுப்பியது. பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசு வந்ததும் அந்த கும்பல் பதுங்கிவிட்டது.
இதனை கண்டித்து அடுத்த நாள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எலவனசூர்கோட்டையில் செப்டம்பர் 21 அன்று மாலையில் வி.சி.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்
தோழர் வினாயகம்,
உளுந்தூர்பேட்டை,
மக்கள் அதிகாரம் – கடலூர் மண்டலம்.