வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | திருவாரூர் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

திருவாரூர் அரங்கக் கூட்டம்

“சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!” என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ”வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்று ஆறு இடங்களில் அரங்கக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

அதில் முதல் அரங்கக் கூட்டம் திருவாரூரில் செப்டம்பர் 23 அன்று நடைபெற்றது. அரங்க கூட்டம் தோழர் ஆசாத், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் லெனின், மக்கள் அதிகாரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

தோழர் ஜி. வரதராஜன் MC, ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு, திரு.முஜிபுர் ரகுமான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர், திரு. விளாயத் உசேன் SDPI கட்சியின் மாவட்ட தலைவர், திரு. அன்பு வே. வீரமணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்டச் பொதுச்செயலாளர், தோழர் நவமணி திருவாரூர் பத்திரிகையாளர், அய்யா. எம். மோகன் திராவிடர் கழகம் மாவட்ட தலைவர், தோழர் சத்யராஜ் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர், தோழர் கலைவாணன் மே 17 இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தோழர் பாட்ஷா அனைத்து மக்கள் நீதி கட்சியின் மாநில தலைவர், தோழர் இராஜ்குமார் மக்கள் அதிகாரம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை வகித்தனர்.

தோழர் அமிர்தா மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் மற்றும் தோழர் சிவா புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் எம் முரளி, மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

பாசிசத்தின் அபாயத்தையும் அதை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாய் உரைகள் அமைந்தன. மாணவர்களும் மக்களும் ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க