வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | விருத்தாசலம் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

விருத்தாசலம் அரங்கக் கூட்டம்

“சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!” என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ”வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்று ஆறு இடங்களில் அரங்கக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

அதன் அங்கமாக செப்டம்பர் 30 அன்று விருத்தாசலத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர் மோகன்ராஜ் (வழக்கறிஞர், விருத்தாசலம்) அவர்களின் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது.

தோழர் மோகன்ராஜ் (வழக்கறிஞர், விருத்தாசலம்) வரவேற்புரையில் ”ஒட்டுமொத்த நாடும் இன்று பாசிசமயமாகிவிட்டது நாளை காங்கிரஸ் வந்தாலும் கார்பரேட் நலனுக்காகத் தான் வேலைசெய்யும் மக்களுக்காக அல்ல” என்று பேசினார்.

தோழர் ஜெயகுமார் (மக்கள் அதிகாரம், கடலூர்) தலைமையுரையில் ”கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த பாசிச அரசு என்னென்ன கொடுமைகளை செய்துள்ளது – சிறுபான்மையினரை ஒடுக்குவது, தலித்துகளை ஒடுக்குவது, மாணவர்களை ஒடுக்குவது, விவசாயிகளை ஒடுக்குவது போன்ற பாசிச நடவடிக்கைகளை செய்து கொண்டுவருகிறது. இனக் கலவரங்களையும், மதக்கலவரங்களையும், சாதி கலவரங்களையும் உழைக்கும் மக்களிடையே தூண்டிவிடுகிறது இந்த பாசிச கும்பல். இதை வீழ்த்த பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைக்க வேண்டும்” என்று பேசினார்.

தோழர். முருகானந்தம் (செயலர், கடலூர் மண்டலம், மக்கள் அதிகாரம்) பேசுகையில் ”பெரும்பாலான மக்கள் இன்று குழுக்கடனில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு காரணம் ஏதோ ஒரு முதலாளி நம் வீட்டிற்கு எல்லா பொருட்களையும் வாங்கியே ஆகவேண்டும் என்று தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்கிறான். அதற்கு மக்கள் பலியாகின்றனர். இதற்கு காரணம் காவி கார்பரேட் அரசுதான்” என்று பேசினார்.

தோழர். உத்திரவேல் (வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர், விசிக) பேசுகையில் ”நாம் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனை வீழ்த்த மக்கள் புரட்சியே தீர்வு” என்று பேசினார்.

தோழர். இராஜேந்திரன் (கடலூர் மாவட்ட பொறுப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி) ”சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கின்ற இந்த அரசை வீழ்த்தாமல் நமது வாழ்வு நிலைக்காது. ஒட்டு மொத்தமாக இந்த நாட்டையும் காவியின் பிடியில் இருந்து மீட்க வேண்டும்” என்று பேசினார்.

தோழர். விஜயன் (கொள்கை பரப்புச் செயலாளர், த.வா.க) பேசுகையில் ”ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் கலவரங்களைத் தூண்டி அதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது இந்த பிஜேபி அரசு. இவர்களை வீழ்த்த தமிழக வாழ்வுரிமை கட்சி மக்கள் அதிகாரத்தோடு களத்தில் நின்று போராடும்” என்று பேசினார்.

தோழர். தங்கமணி (ம.ஜ.இ.க, தஞ்சை) ”உழைக்கும் மக்களிடையே வர்க்க அரசியலை பேசவேண்டும். இந்த பாசிச கும்பலை மக்கள் ஒன்று திரண்டு வீழ்த்த வேண்டும். ஒட்டுமொத்த கட்டமைப்பும் கார்பரேட் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறது” என்று பேசினார்.

தோழர். ரவி (மாநில ஒருங்கிணைப்புக் குழு, பு.மா.இ.மு) ”இந்த பிஜேபி-ஆர்எஸ்எஸ் கும்பல் என்பது சாதரனகு ம்பல் அல்ல. இது ஒரு கலவர கும்பல். அனுமன் ஜெயந்தி என்ற பெயரில் இஸ்லாமியர்களை கொலைசெய்வது பேன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது இந்த கும்பல். அம்பானி-அதானி நலனுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது இந்த அரசு.சாதிய அடிப்படையிலான கல்வி சாதிய அடிப்படையிலான வேலை என்று இந்துத்துவா அரசியலை நிலைநாட்டுகிறது இந்த பாசிச கும்பல். ஆக இந்த பாசிச கும்பலை வீழ்த்தியே ஆகவேண்டும்” என்று பேசினார்.

தோழர். மருது(மாநில செய்தி தொடர்பாளர் மக்கள் அதிகாரம்) ”இந்த பாசிச RSS-BJPயை வீழ்த்தியே ஆகவேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி போராட வேண்டும், இல்லையென்றால் இந்த பாசிச அபாயத்தில் இருந்து மீளமுடியாது. ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி.என்பது நம்மை சுற்றிவளைத்துக்கொண்டிருக்கிற மலைப்பாம்பு. நாம் முதலில் அதை அடித்துக் கொன்றாக வேண்டும். ஆகவே பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைக்க வேண்டும்” என்று பேசினர்.

மக்கள் கலை இலக்கிய கழகம், சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இறுதியாக தோழர். விநாயகம் (மக்கள் அதிகாரம் உளுந்தூர்பேட்டை) அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிவு பெற்றது.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
94889 02202



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க